எங்க ஊரு சினிமா: ஏனுங்க... கோயம்புத்தூரில் எடுக்கப்பட்ட இந்த 10 படங்கள் தெரியுமாங்க?!

எஜமான் - ரஜினிகாந்த் நடிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1993-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், `எஜமான்’. பொள்ளாச்சியை மையமாக வைத்து இப்படத்தின் கதை நகரும்.

சின்ன கவுண்டர் - விஜயகாந்த் நடிப்பில் ஆர்.வி.உதயகுமார் இயக்கத்தில் இளையராஜா இசையில் 1992-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம், `சின்ன கவுண்டர்’. கொங்கு பகுதியில் உள்ள கிராமத்தை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கும். 

முரட்டுக் காளை - பஞ்சு அருணாச்சலம் எழுத்தில் எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1980-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `முரட்டுக்காளை’. மாஸான இந்த கமர்ஷியல் படத்தைப் பொள்ளாச்சி சுற்றிய பகுதியில் படமாக்கியுள்ளனர்.  

சின்ன தம்பி - `சின்ன தம்பி’ என்றதும், அப்படத்தின் பாடல்கள்தான் முதலில் நினைவுக்கு வரும். பிரபு, குஷ்பு நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் இளையராஜா இசையில் 1991-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இது. கோபிசெட்டிப்பாளையம் சுற்றிய பகுதிகளில் இதனைப் படமாக்கியுள்ளனர்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

சகலகலா வல்லவன் - கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற இந்தத் திரைப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியுள்ளார். பஞ்சு அருணாச்சலம் இந்தப் படத்தின் கதையை எழுதியுள்ளார். இளையராஜா இதற்கு இசையமைத்துள்ளார். 

சூர்யவம்சம் - சரத்குமாரின் வசனங்களில் இருந்தே தெரிந்துகொள்ளலாம், இந்தக் கதை கோயம்புத்தூர் பகுதியைச் சுற்றி நடக்கும் என்பதை. படம் வெளிவந்தது முதல் இப்போதுவரை பலரை மோட்டிவேட்டாக்கும் இந்தப் படம் விக்ரமன் இயக்கத்தில் எஸ்.ஏ.ராஜ்குமார் இசையில் 1997-ம் ஆண்டு வெளியானது.

நாட்டாமை - கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடிப்பில் 1994-ம் ஆண்டு வெளியான திரைப்படம், `நாட்டாமை’. மிகப்பெரிய வெற்றிபெற்ற இந்தத் திரைப்படம் கோயம்புத்தூர் பகுதிகளைச் சுற்றி நடப்பதாக  காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.

மீசைய முறுக்கு - 2 கே கிட்ஸின் மோஸ்ட் ஃபேவரைட் மோட்டிவேஷன் படம் என `மீசைய முறுக்கு’ படத்தைக் குறிப்பிடலாம். ஹிப்ஹாப் தமிழா எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்து வெளியான திரைப்படம் இது. கோயம்புத்தூரை மையமாக வைத்து அவர்களின் இளமைப்பருவம் இயக்கப்பட்டிருக்கும்.

பூஜை - விஷால் நடிப்பில் ஹரி இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பூஜை. இதில் விஷால் கோயம்புத்தூர் மார்க்கெட்டை மையமாக வைத்து வியாபாரம் செய்வார்.

தென்னவன் - விஜயகாந்த் நடிப்பில் நந்தகுமார் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில்2003-ம் ஆண்டு வெளியான திரைப்படம், தென்னவன். மாஸான இந்தத் திரைப்படத்தின் சில காட்சிகள் கோயம்புத்தூரில் படமாக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூரில் எடுத்த உங்களது ஃபேவரைட் படத்தைக் கமெண்ட் பண்ணுங்க!