எங்க ஊரு சினிமா: மாஸ் மண்... மதுரை மக்களின் கதையைப் பேசிய படங்கள்!

தமிழ் சினிமாவில் மதுரையைக் களமாகக் கொண்டு அதிகளவில் படங்கள் வெளிவந்துள்ளன. அவற்றில் நம் நினைவில் நிற்கும் டாப் 10 படங்களை இந்தப் பட்டியலில் காணலாம்...

ஆடுகளம் - தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையில் 2011-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிப்பெற்ற திரைப்படம் ஆடுகளம். ஏகப்பட்ட விருதுகளை வாங்கிக் குவித்த இந்தத் திரைப்படம் மதுரையை பின்புலமாகக் கொண்டு நகரும். போர்க்களமாக இருக்கும் ஆடுகளத்தின் களம் மதுரைதான்.

அரவான் - காவல்கோட்டம் நாவலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது. ஆதி நடிப்பில் வசந்த பாலன் இயக்கத்தில் கார்த்திக் இசையில் 2012-ம் ஆண்டு இந்தப் படம் வெளிவந்துள்ளது. மதுரை நகரை மையமாக வைத்து நகரும் வரலாற்றுத் திரைப்படம் ஆகும். வரலாறு முக்கியம்!

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

கில்லி - சென்னையிலதான கில்லி படம் நடக்கும்னு நீங்க நினைக்கலாம். ஆனால், ஹீரோ மதுரைக்கு மேட்ச் விளையாட போனதுனாலதான் கதையே ஸ்டார்ட் ஆச்சு. அதுனால, இந்த லிஸ்ட்ல கில்லியை தவிர்க்கவே முடியாது. விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 2004-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. எல்லா ஏரியாவும் நம்ம ஏரியாதான். 

ஜிகர்தண்டா - அசால்ட்டு சேது பெயரைக் கேட்டாலே போதும். மதுரைல அவர் பண்ண சம்பவங்கள்தான் நியாபகம் வரும். அப்படி இருக்கும்போது எப்படி மறக்க முடியும். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிப்பில் சந்தோஷ் நாராயணன் இசையில் 2014-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது. அந்த பி.ஜி.எம் இன்னும் மண்டைக்குள்ள ஓடுதுல!

குள்ளநரிக் கூட்டம் - காதல், கனவை சேஸ் பண்றதுனு செம எனர்ஜியான திரைப்படம். விஷ்ணு விஷால் நடிப்பில் ஸ்ரீபாலாஜி இயக்கத்தில் செல்வகணேசன் இசையில் 2011-ம் ஆண்டு வெளியான திரைப்படம் இது. இந்தப் படம் மதுரையை பின்புலமாக வைத்து எடுக்கப்பட்டதுதான்.

மதுர - பெயர்லையே மதுரைய வச்சிக்கிட்டு மதுர இல்லாமல் ஒரு லிஸ்ட போட முடியுமா? விஜய் நடிப்பில் ரமணா மாதேஷ் இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் 2004-ம் ஆண்டு வெளியான திரைப்படம் மதுர. சின்ன வயசுல இந்தப் படத்தைப் பார்த்து எப்படியாவது கலெக்டர் ஆகணும்னு சில்லறைய சிதற விட்டவங்க கமெண்ட் பண்ணுங்க!

பருத்திவீரன் - அடியே முத்தழகு.... சித்தப்பு... இதெல்லாம் மறக்க முடியாத வசனங்கள். அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் யுவன் இசையில் 2007-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பருத்திவீரன். மதுரையைச் சுற்றியே இந்தப் படம் நகர்வதாக இருக்கும். 

பாண்டிய நாடு - `நானும் மதுரைக்காரன் தாண்டா’ அப்டினு டயலாக் பேசுற விஷால்தான் நிறைய மதுரையைக் களமாகக் கொண்ட படங்களில் நடிச்சிருக்காருனு நினைக்கிறேன். அந்த லிஸ்ட்ல பாண்டிய நாடும் ஒண்ணு. சுசீந்திரன் இயக்கத்தில் இமான் இசையில் 2013-ம் ஆண்டு இந்தத் திரைப்படம் வெளியானது.

ரஜினி முருகன் - சிவகார்த்திகேயன் நடிப்பில் பொன்ராம் இயக்கத்தில் இமான் இசையில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம், ரஜினி முருகன். இந்தப் படமும் மதுரையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும். 

சேதுபதி - விஜய் சேதுபதி நடிப்பில் அருண்குமார் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் சேதுபதி. செம மாஸான இந்தத் திரைப்படமும் மதுரையைக் கதைக்களமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருக்கும்.

இதுல உங்களோட ஃபேவரைட் படம் அல்லது `இந்தப் படத்தை நீங்க மிஸ் பண்ணிட்டீங்கப்பா’ அப்டினு நினைக்கிறப் படத்தை கமெண்ட்ல சொல்லுங்க!