`வாழ்க்கை ஒரு பட்டாம்பூச்சி’ - ஈரோடு தமிழன்பனின் 7 ஹைக்கூ கவிதைகள்!

“”

தடுக்கி விட்டதும் ஆசிரியர் உடைந்து உதிர்ந்தார் பாடம் பாடமாய்! - ஈரோடு தமிழன்பன்

“”

முதலாளி சமாதிமேல் முட்டிக் கொண்டழுதான் சம்பளப் பாக்கி! - ஈரோடு தமிழன்பன்

“”

மகன் வைத்த மீதி மது குடித்த தந்தை திட்டினார் பொறுப்பில்லாத பையல்! - ஈரோடு தமிழன்பன்

“”

முதல் நாளிலேயே ஆசிரியரின் பிரம்பைக் கேட்டு அடம் பிடத்தது குழந்தை! - ஈரோடு தமிழன்பன்

“”

அதிகாரி பிறந்த நாள் வீடு முழுக்க இலவச அலங்காரம்! - ஈரோடு தமிழன்பன்

“”

ஆட்சி முடிந்த அமைச்சர் அறிக்கை............ இனி நாட்டுக்கு உழைப்பேன்! - ஈரோடு தமிழன்பன்

“”

வாழ்க்கை ஒரு பட்டாம் பூச்சி போல அது என்னாவாயிருந்தபோதும்! - ஈரோடு தமிழன்பன்

“”

`இது அதுல்ல..’ ‘அண்ணாத்த’ vs `விஸ்வாசம்’ போஸ்டர் ஒப்பீடு

Read More