’முக்கூடல் சங்கமம்; சக்தி பீடம்’  கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலின் சிறப்புகள்!

பார்வதி தேவி வலது கையில் பூமாலையுடன் கிழக்கு நோக்கி தவம் புரியும் கோலத்தில் நிற்கிறாள். பார்வதி தேவியின் சிலை பரசுராம முனிவரால் நிறுவப்பட்டதாக-வும் நம்பப்படுகிறது.

அம்மன் குடியிருக்கும் இந்த கன்னியாகுமரி கோயிலானது கிழக்குப் பகுதியில் வங்காள விரிகுடாவும், மேற்கு பகுதியில் அரபிக்கடலும், தெற்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலுமாக முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

திருமணம் ஆகாமல் இருக்கும் கன்னிப் பெண்கள் இந்த கோயிலுக்குச் சென்று வேண்டிக் கொண்டால் விரைவில் திருமணம் நிச்சயிக்கப்படும்.

தேவியின் சக்தி பீடங்களில் இதுவும் ஒன்று. தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடமாக இந்த இடம் கருதப்படுகிறது.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

தேவர்களையும், முனிவர்களையும் அசுரர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்-காக, சக்திதேவி கன்னிப் பெண்ணாக, தென்பகுதியான குமரியில் அவதரித்தார் என்கின்றனர்.

காசிக்கு சென்று புண்ணிய தீர்த்தத்தில் நீராடுவதற்கு முன்பு கன்னியாகுமரியில் இருக்கும் முக்கூடல் சங்கமிக்கும் இந்தத் தீர்த்தத்தில் நீராடுவதால் பாவங்கள் தீரும் என்பது ஐதீகம்.

3,000 ஆண்டுகளுக்கு முன்னால் பரசுராமனால் கட்டப்பட்டு பாண்டிய மன்னனால் புதுப்பிக்கப்பட்ட இந்தக் கோயிலில்  பகவதி அம்மன் கன்னியாக நின்று பாணாசுரன் என்னும் அசுரனை நவராத்திரி இறுதி நாளான விஜயதசமி அன்று வதம் செய்தார் என்பது வரலாறு.

இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் தேவியை குமரி அம்மன், கன்னியாகுமரி அம்மன், துர்க்கை அம்மன், பகவதி அம்மன் என்று பல பெயர்களில் அழைக்கின்றனர்.

நீலத்திரைக்கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் ’குமரி அன்னை’ என்று பாரதி போற்றியவாறு குமரி தெய்வத்தின் கோயில் கடலோரமாக அமைந்து  இந்தக் கோயில் பெரிய நிலப்பரப்பில் நான்குபுறமும் மதில் சுவர்கள் சூழ  அமைந்துள்ளது.

அம்மன் அணிந்திருக்கும் வைர மூக்குத்தி கண்களைப் பறிக்கும் பிரகாசமுடையதா-கத் திகழ்கிறது. பகவதி தாய் தனது ஒரு கரத்திலே இலுப்பைப்பூ மாலையைத் தரித்து, மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்திலே காட்சியளிக்கிறாள்.