11 தீர்த்தங்கள் ; மணக்கோலத்தில் முருகன் திருப்பரங்குன்றம் கோயிலின் சிறப்புகள்

இந்த கோயிலின் உயரம் சுமார் 190 மீட்டர் வரை உள்ளது. இம்மலையை நித்தம் வலம் வந்து வழிபட்டால் தொழுவோரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் தேவாரத்தில் பாடியிருக்கிறார்.

திரு + பரம் + குன்றம். பரம் என்றால் பரம் பொருளான சிவபெருமான். குன்றம் என்றால் குன்று (மலை). திரு என்பது அதன் சிறப்பை உணர்த்தும்  அடைமொழி. இப்படித்தான் திருப்பரங்குன்றம் என பெயர் பெற்றது.

திருப்பரங்குன்றம் லிங்க வடிவமாகக் காட்சியளிக்கும் அருட் செறிந்த மலை. இந்தத் திருப்பரங்குன்றத்தில் தங்கி சிவசக்தியை நோக்கி ஆறுமுகப் பெருமான் தவமிருந்தார் என்பது வரலாறு.

மலையடிவாரத்தில் கீழ்த்திசையில் சரவணப்பொய்கை அமைந்திருக்கிறது இத்தீர்த்தம் முருகனின் கைவேலினால் உண்டானதென்றும் இத்தீர்த்தத்தைக் கண்டாலோ, நீராடினாலோ பாவங்கள் நீங்கும். இங்கு  மொத்தம் 11 தீர்த்தங்கள் இருக்கின்றன.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

மற்றத் திருக்கோயிலின் கருவறை போல் இல்லாமல் கோயில் கருவறை பெரியதாக ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாய் உள்ளது.

கருவறையின் இடது புறத்தில் கிழக்கு நோக்கியவாறு மலையைக் குடைந்து சத்திய கிரீசுவரர் எனும் திருப்பெயர் கொண்டு சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் இருக்கிறார்.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். முருகப் பெருமான் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட தலம்.

சங்ககாலப் புலவரான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு தனது குறையை நீக்கிக் கொண்ட திருத்தலம்.

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் எப்போதும் சேவல் கொடி வீசிப் பறந்து கொண்டே இருக்கும். கொடி பட்டொளி வீசி உயரத்தில் பறப்பது கோயில் நோக்கி வரும் பக்தர்களை "வருக வருக" என வரவேற்பது போல் காட்சி அளிக்கிறது.

லிங்க வடிவில் இருக்கும் இம்மலையைப் பற்றி சைவ சமயக் குறவர்களில் சுந்தரமூர்த்தி நாயனார் திருஞானசம்பந்தப் பெருமான் ஆகியோர் இவ்வூருக்கு வந்து ஆலய வழிபாடு செய்து பதிகங்கள் பல பாடியுள்ளனர்.