'தீர்த்த துர்க்கை;  5 தலை நாகராஜர்' நாகர்கோவில் நாகராஜா கோயில் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

கருவறையில் நாகராஜர் 5 தலைகளுடன் சுயம்புவாக காட்சியளிக்கிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும் பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.

இந்தக் கோயில் நாகதோஷ பரிகார தலம். மேலும், வெளியில் உள்ள தல விருட்சத்தை சுற்றி நாக சிலைகளும் உள்ளன. இதில், மஞ்சள் மற்றும் பால் அபிஷேகம் செய்வது சிறப்பு ஆகும்.

கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. வயல் இருந்த இடம் என்பதால்  எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது.  இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த தலத்தில் உள்ள  துர்க்கை சிலை, இங்கு உள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது.  அதனால் அன்னை ’தீர்த்த துர்க்கை’  என்று அழைக்கப்படுகி-றார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

திருப்பாம்புரம், பாமணி, நாகப்பட்டினம், திருகாளஹஸ்தி, திருநாகேஸ்வரம், திருப்பனந்தாள், கீழப்பெரும்பள்ளம், கோடகநல்லூர் போன்ற கோயில்களில் மூலவரான சிவபெருமானை நாகங்கள் வழிபட்டுத் தங்களது கொடிய தோஷங்களை போக்கிக்கொண்டது வரலாறு.

ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதத்தில் இந்தக் கோயிலில் பணியாற்றும் அர்ச்சகர்களே ஓலைக்கூரையைப் பிரித்து மீண்டும் புதிய கூரை வேய்கின்றனர். கேரள கட்டடக் கலை பாணியில் இந்த கோயில் அமைக்கப்பட்டுள்ளது.

நாகராஜர் சன்னதிக்கு வலதுபுறத்தில் காசி விஸ்வநாதர், அனந்தகிருஷ்ணன், கன்னிமூல கணபதி சன்னதிகள் அமைந்துள்ளன.

இக்கோயிலின் மூலவர் நாகராஜா என்றாலும் அனந்தகிருஷ்ணர் சன்னதிக்கு எதிரில்தான் கொடிமரம் உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் தைப் பெருந்திருவிழா 10 நாள்கள் உற்சவமாக  வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும்.

இக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இக்கோயிலைப் புதுப்பித்துள்ளார்.

இக்கோயிலின் வெளிப் பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. வேணாட்டு அரசனான வீர உதய மார்த்தாண்டன் இக்கோயிலைப் புதுப்பித்துள்ளார்.