மூலவர் சிலையின் சிறப்பு; 693 படிகள் - பழனி முருகன் கோயில் பத்தி இதெல்லாம் தெரியுமா?

பெரும்பாலும் தமிழக கோயில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால், இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!

கையில் கோலுடன் ஆண்டியாகக் காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் “அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்” என்பதாகும்.

குடும்பத்தில் சந்தோஷம், தொழில் செழிக்க, செல்வம் பெருக இந்தக் கோயிலில் அதிகளவில் பக்தர்கள் பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி முருகனை வேண்டிக் கொள்கின்றனர்.

முருகன் முதலில் கோபித்து வந்து நின்ற தலம் என்பதால், மலை அடிவாரத்திலுள்ள திருஆவினன்குடி தலமே “மூன்றாம் படை வீடு’ ஆகும். இங்கு முருகன் மயில் மீது அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

பழநிக்கு செல்பவர்கள் முதலில் இங்கிருந்து 4 கி.மீ தூரத்திலுள்ள பெரியாவுடையாரை தரிசித்துவிட்டு, பின்பு பெரியநாயகியையும், அடுத்து மலையடிவாரத்தில் இருக்கும் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதரையும் வணங்குவது மரபு.

கோயில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோயிலை அடைந்துவிடலாம்.

இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகரால் உருவாக்கப்பட்டது. 4,448 அரிய மூலிகைகளைக் கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார்.

திருவண்ணாமலை அருணாச்சல மலையை மக்கள் சித்ராபவுர்ணமி அன்று எவ்வாறு கிரிவலம் வருகின்றனரோ அதுபோல் அக்னி நட்சத்திர நாளில் பக்தர்கள் இப்பழனி மலையை கிரிவலம் செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

விநாயகரோ, தனது பெற்றோரை உலகமாகக் கருதி அவர்களை சுற்றிவந்து ஞானப்பழத்தை வென்றார். இதனால் ஏமாற்றமடைந்த குமரன் அனைத்தையும் துறந்து பழனி மலையில் குடியேறினார். அன்றிலிருந்து அவரது நின்ற இடம் `பழம் நீ ` (பழனி) என அழைக்கப்படுகிறது

பழனி மலைக்கு செல்லும் வழியில் இடும்பனின் சந்நிதி இருக்கிறது. இடும்பனுக்கு அதிகாலையில் முதலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகே, மலை மீது வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு பூஜைகள் செய்யப்படுகிறது.