சின்னத்திரை நட்சத்திரங்களின் பிரபல யூ டியூப் சேனல்கள் எது? அவங்க சேனலோட ஸ்பெஷல் என்ன? இதைப் பற்றிதான் தெரிஞ்சுக்கப் போறோம். சோ.. லெட்ஸ் ஸ்டார்ட்!
Priyanka Deshpande - விஜய் டி.வில ஃபேமஸ் ஆங்கரா இருந்த பிரியங்கா, இப்போ பிக்பாஸ்ல கலக்கிட்டு இருக்காங்க. இவங்களோட சேனல்தான் இது. தன்னோட லைஃப்ல நடக்குற டெய்லி ஆக்டிவிட்டீஸ வீடியோவா பதிவு பண்ணி அப்லோட் பண்ணுவாங்க.
Mr. Makapa - விஜய் டி.வில இன்னொரு ஃபேமஸ் ஆங்கர், மா.கா.பா ஆனந்த். இவரும் தன்னுடைய அன்றாட வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை தொகுத்து வீடியோவா போட்டுட்டு இருக்காரு. நிறைய விஷயங்களை லைவ் ஸ்ட்ரீம் பண்றது, சேலஞ்சஸ் பண்றதுனு மக்கள்கூட எப்பவும் ஒரு கனெக்ட்லயே இருப்பாரு.
Parattai pugazh - குக் வித் கோமாளினு பேரை சொன்னாலே நமக்கு புகழ் ஞாபகம்தான் வரும். அந்த அளவுக்கு ஃபேமஸ் ஆயிட்டாரு. அன்றாடம் தன்னோட வாழ்க்கைல நடக்குற விஷயங்களை விளாக் வீடியோவா பதிவு செய்து அப்லோட் பண்றாரு. ஒவ்வொரு வீடியோலையும் புகழோட அந்த மேஜிக் காமெடி டச் இருக்கும்.
Wow life - பாஸிட்டிவ் வைப்ஸ் நிரம்பிய சேனல்தான் வாவ் லைஃப். விஜே அர்ச்சனாவும் அவங்களோட பொண்ணும் சேர்ந்துதான் இந்த சேனலை நடத்திட்டு வராங்க. நிறைய விளாக்ஸ் போடுவாங்க. பார்த்து எஞ்சாய் பண்ணலாம்.
Theatre D - குக் வித் கோமாளி 2 டைட்டில் வின்னர் கனியோட சேனல்தான் இந்த தியேட்டர் டி. கனியோட பெயரை சொன்னதும் அவங்க குக்கிங் வீடியோஸ் நிறைய போடுவாங்கனு தான நினைச்சீங்க? கரெக்டுதான் நீங்க நினைச்சது! அப்படியே நிறைய கதைகளும் சொல்லுவாங்க.
Sunita Xpress - சுனிதாவோட தமிழுக்கே அவ்வளவு ஃபேன்ஸ் இருக்காங்க. அசாம்ல இருந்து வந்து தமிழ்நாட்டுல ஒரு ஃபேமஸ் குக்கிங் ஷோல கோமாளியா இருந்து மக்கள் மனசுல இடம் பிடிக்கிறது எல்லாம் வேற லெவல். இவங்களும் நிறைய விளாக்ஸ், மேக் அப் டிப்ஸ், டேன்ஸ் வீடியோக்களை அப்லோட் பண்ணுவாங்க.
Hussain manimegalai - மணிமேகலை மற்றும் ஹூசைன் வாழ்க்கைல நடக்குற விஷயங்களை வீடியோவா பதிவு பண்ணி அப்லோட் பண்றாங்க. றிப்பா மணிமேகலை சமையல் தொடர்பான வீடியோக்கள் எல்லாம் வேற லெவல் ஃபன்னா இருக்கும்.
Sanjiev & Alya - ராஜா ராணி சீரியல் மூலமா பலரது மனதையும் தங்கள் பக்கம் ஈர்த்தவங்க சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஜோடி. லாக்டௌன்ல இருந்து யூ டியூப் மூலமா பலரது மனதையும் கவர்ந்துட்டு வர்றாங்க. இவங்களும் நிறைய விளாக் வீடியோக்களை அப்லோட் பண்ணுவாங்க.
Kathakelu Kathakelu - ஸ்டோரி டெல்லிங் உங்களுக்கு ரொம்ப புடிக்குமா? அப்போ உங்களுக்கான சேனல்தான் இது. நடிகை சுஜிதாதான் இந்த சேனலை நடத்திட்டு இருக்காங்க. குழந்தைகளுக்காகவும் அம்மாக்களுக்காகவும் நிறைய கதைகள் சொல்றாங்க.
உங்க Favourite Celebrities பத்தின 1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!