இடி/ மின்னலின்போது பாதுகாப்பாக இருப்பது எப்படி...செய்யக் கூடாதது என்ன?

இடி மற்றும் மின்னலின்போது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள்!

இடி/மின்னலின் போது செய்ய வேண்டியவை

குதிகால்களை ஒன்று சேர்த்து, தலைகுனிந்து, தரையில் பதுங்குவதுபோல அமர்ந்து கொள்ள வேண்டும். நீங்கள் தரையை ஒட்டி அமர்வதால், மின்னலின் தாக்கம் குறைவாக இருக்கும். தரையில் சமமாகப் படுக்கும் போது மினனலின் தாக்கம் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளதால், தரையில் சமமாகப் படுக்கக் கூடாது.

உடலுடன் மின்கடத்தும் பொருளின் தொடர்பு கூடாது.

மின்னல் தாக்கத்தின்போது உங்கள் குதிகால்களை ஒன்றாக சேர்த்து அமர்ந்து கொள்வதால், மின்சாரம் தரையைத் தாக்கி, பின்னர் ஒரு குதிகால் வழியாக உங்களது உடலுக்குள் நுழைந்து, உடலின் மற்ற பகுதிகளுக்கு செல்லாமல், மற்ற குதிகால் வழியாக வெளியேறிவிடுகிறது.

உங்களது கழுத்துக்கு பின்னால் இருக்கும் முடியில் நீங்கள் ஏதேனும் மாற்றத்தை உணர்ந்தால், நீங்கள் இருக்கும் இடத்தின் அருகில் மின்னலின் தாக்கம் உடனடியாக நிகழப்போகிறது என்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம். உடனடியாக நீங்கள் குதிகால்களை ஒன்று சேர்த்து, தலை குனிந்து, தரையில் பதுங்குவது போல அமர்ந்து கொள்ள வேண்டும். முன்னெச்சரிக்கை இன்றி மின்னலின் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது.

செவித்திறன் இழப்பு ஏற்படுவதை குறைத்துக் கொள்ள காதுகளை நன்றாக மூடிக்கொள்ள வேண்டும்.

மின்னல் தாக்கத்தின்போது உங்கள் குதிகால்கள் மட்டுமே தரையைத் தொட்டுக் கொண்டு இருக்க வேண்டும். மின்னல் முதலில் தரையை தாக்கி, பின்னர் உடலைத் தாக்கும் என்பதால், மின்னல் தர்க்கத்தின் போது தரையைத் தொடுவதை குறைத்துக் கொள்வதன் மூலம் உங்களது உடலில் மின்சாரம் பாய்வதற்கான வாய்ப்பைக் குறைக்க இயலும்.

இடி/மின்னலின்போது செய்யக்கூடாதவை :

குடையைப் பயன்படுத்தக் கூடாது.

மின்னல் தாக்கத்தின்போது திறந்தவெளியில் நிற்பதைத் தவிர்க்கவும்.

மரங்கள், உலோகக் கட்டமைப்புகளின் கீழ் நிற்கக் கூடாது.

நீச்சல் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

உதவிக்கு...

மாநில அவசர கட்டுப்பாட்டு அறை  எண் : 1070 மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை  எண் : 1077 செல்போன்  செயலி : tnsmart வாட்ஸ் அப் எண் : 9445869848

Tomato: தக்காளியால் கிடைக்கும் 6 முக்கிய மருத்துவ பலன்கள்!