Harbhajan Singh: `தமிழ்ப் புலவர்' ஹர்பஜன் சிங்கின் தரமான 5 டெஸ்ட் சம்பவங்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இருந்த ஹர்பஜன் சிங், அனைத்துவிதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் செய்த தரமான 5 சம்பவங்களை இங்கே காணலாம்...

இந்தியா vs நியூஸிலாந்து - ஹாமில்டன் 2009 (6 விக்கெட் - 63 ரன்கள்)

நியூஸிலாந்தில் ஹாமில்டன் மைதானத்தில் 2009-ம் ஆண்டு தொடரின் முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் நியூஸிலாந்து அணியை சுழலில் திணறவிட்டார். அதில், நியூஸிலாந்து 279 ரன்களில் சுருண்டது. 28 ஓவர்கள் வீசிய ஹர்பஜன் சிங் 63 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இந்தியா vs தென்னாப்பிரிக்கா - கொல்கத்தா 2010 (3 விக்கெட் - 64 ரன்கள், 5 விக்கெட் - 59 ரன்கள்)

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

கொல்கத்தா ஈடன் கார்டனில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 64 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் 59 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா - சென்னை, 2001 (7 விக்கெட் - 133 ரன்கள், 8 விக்கெட் - 84 ரன்கள்)

ஹர்பஜன் கரியரில் 2001-ம் ஆண்டு நடந்த இந்தப் போட்டியைத் தவிர்க்கவே முடியாது. சென்னையில் நடந்த இந்த போட்டியில் ஆஸ்திரேலியாவின் முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 15 விக்கெட்டுகளை ஹர்பஜன் வீழ்த்தினார்.

இந்தியா vs ஆஸ்திரேலியா - கொல்கத்தா, 2001 (7 விக்கெட் - 123 ரன்கள், 6 விக்கெட் 73 ரன்கள்)

அதே 2001-ம் ஆண்டு கொல்கத்தாவில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை ஹர்பஜன் கைப்பற்றினார். இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். மொத்தமாக அந்தப் போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ் - மும்பை, 2002 (7 விக்கெட் - 48 ரன்கள்)

மும்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2002-ம் ஆண்டு நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற ஹர்பஜன் சிறந்த பங்காற்றினார். இந்தப் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் 48 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.