`என்னங்க சொல்றீங்க..!’ - கேரட் சாப்பிடுவதில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?

கேரட்டை வேகவைத்து சாப்பிட்டாலும் சரி, வேக வைக்காமல் சாப்பிட்டாலும் சரி... அதனால், ஏகப்பட்ட நன்மைகள் நமது உடலுக்கு ஏற்படும். அவற்றில் சில இங்கே...

இரத்தக் கொழுப்பு அதிகரிப்பதால் இதயத்தில் பிரச்னைகள் ஏற்படும். கேரட்டை அதிகமாக எடுத்துக்கொள்வதால் இந்த பிரச்னையில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள்கூட கேரட்டை தங்களது உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க கேரட் அதிகம் உதவுகிறது.

கேரட்டில் இருக்கும் வைட்டமின் ஏ கண்களுக்கு நன்மை அளிக்கும்.

கேரட்டில் குறைவான கலோரிகளே உள்ளது. இதனால், உடல் எடையைக் குறைப்பவர்கள்கூட தங்களது உணவில் கேரட்டை சேர்க்கலாம்.

புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே தடுக்கும் வல்லமை கேரட்டுக்கு உண்டு. கீமோதெரஃபி சிகிச்சையின்போது பக்க விளைவுகளின் வீரியத்தைக் குறைக்கவும் கேரட் பயன்படுகிறது. 

தினமும் கேரட் சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாகும். 

கேரட் சாறுடன் எலுமிச்சை சாறை கலந்து குடித்தால் பித்தக்கோளாறுகள் நீங்கும்.

வாயுத்தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு கேரட் சிறந்த தீர்வாக அமையும்.

நமது உடலுக்கு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் சத்து மிகவும் அவசியமானது. கேரட்டில் இந்த சத்து அதிகமாகவே உள்ளது.

கேரட்டில் வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால், மூட்டு வலி பிரச்னைகளில் இருந்து நம்மை பாதுகாக்கும்.