‘வெங்காயம்னா சும்மாவா?’ - அதனை சாப்பிடுவதால் ஏற்படும் வேறலெவல் பயன்கள்!

பொதுவா யாரையாவது திட்டும்போது வெங்காயம்னு திட்டுவோம். அதுல இருக்குற பயன்களை தெரிஞ்சா இனி யாரையும் வெங்காயம்னு திட்டமாட்டீங்க. அவ்வளவு நன்மைகள் இருக்கு...

வெங்காயத்தில் அதிக அளவு பிளவனாய்டுகள் உள்ளன. இதனை அதிகமாக உண்பதால் உடலில் உள்ள கெட்டக் கொழுப்புகள் வெளியேறுகின்றன.

வெங்காயத்தில் தியோசல்ஃபினேட்டுகள் அதிகம் உள்ளன. இது ரத்த ஓட்டத்தை சீராக்கவும், ரத்தம் உறையாமல் இருக்கவும் பயன்படுகிறது.

வெங்காயத்தை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதால் குடல் புற்றுநோய் ஏற்படுதை தடுக்கலாம். இதில் உள்ள வைட்டமின்கள்,  ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் உடலில் உள்ள ஃப்ரீ-ரேடிக்கல்ஸை அழித்து, புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

வெங்காயத்தில் உள்ள ஆன்டி-ஆக்சிடண்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். உடல் எடைக்கூடுவதைத் தவிர்க்கும்.

வெங்காயத்தில் கால்சியம் சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் எலும்புகளுக்கு அதிக ஆரோக்கியம் கிடைக்கிறது.

வெங்காயத்தில் வைட்டமின் ஏ, சி மற்றும் கே ஆகியவை உள்ளன. இதனை உணவில் சேர்த்துக்கொள்வதால் சருமப்பிரச்னைகள் நீங்கும். தலைமுடி ஆரோக்கியமும் அதிகமாகும். இதன் சாறை தலைமுடி வேர்களில் தடவினால் முடி வளர்ச்சியும் அதிகமாகும்.

வெங்காயத்தில் உள்ள ப்ரீ-பயாடிக்ஸ் இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

வெங்காயம் சாப்பிடுவதால் வயிற்றில் நல்ல பாக்டீரியாக்கள் அதிகமாகின்றன. இதனால், வயிறு ஆரோக்கியமாகிறது. ஜீரண சக்தியும் அதிகமாகிறது.

உடலில் யூரிக் அமிலம் அதிகமாகும்போது சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. வெங்காயம் சாப்பிடுவதால் இந்த யூரிக் அமிலம் சுரப்பது கட்டுப்படுத்தப்படுகிறது.

வெங்காய சாறுடன் சிறுது தேன் கலந்து சாப்பிட்டால் பித்த நீர் சுரப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

வெங்காயம் சாப்பிடுவதால் வேற என்ன நன்மைகள் இருக்கு? உங்களுக்கு தெரிஞ்சதை கமெண்டில் சொல்லுங்க!