‘குறைந்த விலை... அதிக பயன்கள்’ - உணவில் பீன்ஸை கண்டிப்பா மிஸ் பண்ணாதீங்க!
இன்றைக்கு மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் காய்கறிகளில் ஒன்று பீன்ஸ். ஆனால், இதனை பெரும்பாலும் உணவில் சேர்த்துக்கொள்ள மறுப்பார்கள். இந்த பீன்ஸ் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?
உடலில் பயோடின் குறைபாடு இருந்தால் முடி உதிர்தல் பிரச்னை ஏற்படும். பீன்ஸில் அதிகம் பயோடின் உள்ளதால் முடி உதிர்வதைத் தடுக்கிறது.
பீன்ஸில் மற்ற காய்கறிகளைவிட அதிகளவி சிலிகான் சத்து உள்ளது. இது உடலில் உள்ள எலும்புகளுக்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கிறது.
பீன்ஸில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகளவில் உள்ளது. எனவே, பீன்ஸை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை குறையும்.