‘புற்று நோய் தடுப்பு முதல் பற்கள் பாதுகாப்பு வரை’ - பீட்ரூட்டில் எவ்வளவு நன்மைகள் இருக்கு தெரியுமா?

உணவில் பெரும்பான்மையானவர்கள் பீட்ரூட்டை சேர்த்துக்கொள்வது கிடையாது. ஆனால், அதில் இருக்கும் நன்மைகள் தெரிந்தால் நிச்சயம் அதிகம் சாப்பிடுவீங்க...

பீட்ரூட்டை உண்பதால் உடலில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்படுகிறது.

பீட்ரூட்டில் உள்ள நைட்ரேட்டுகள் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 

பீட்ரூட்டை உண்பதால் இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

பீட்ரூட்டில் உள்ள பெட்டானின் மார்பக புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது.

பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. இதனால், ரத்தசோகை ஏற்படுவதை குறைக்கலாம்.

உணவு உண்டபின் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் செரிமானக் கோளாறுகள் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

பீட்ரூட்டில் கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

பீட்ரூட் சாப்பிடுவதால் உடம்பில் உள்ள கொலஸ்ட்ரால் அதிகளவில் குறைகிறது.

பீட்ரூட்டில் ஃபோலிக் அமிலம் உள்ளது. இது கர்ப்பிணி பெண்களுக்கும் கருவில் உள்ள குழந்தைக்கும் நன்மை பயக்கும்.

பீட்ரூட்டில் ஜிங்க் மற்றும் காப்பர் ஆகிய வேதிப்பொருள்கள் உள்ளன. இது கல்லீரல் பாதிப்படைவதைத் தடுக்கிறது.

பீட்ரூட்டில் பீட்டா கரோட்டின் உள்ளதால் கண்புரை நோய் ஏற்படாமல் தடுக்கிறது. மறதி நோய்களுக்கும் தீர்வாக அமைகிறது.

பீட்ரூட்டை ஃபேஸ் மாஸ்க்காக அணிந்து வருவதால் சருமம் பொலிவுடனும் பாதுகாப்புடனும் இருக்கும்.

பீட்ரூட் சாற்றை தலையில் தேய்ப்பதால் முடி வளர்ச்சி அதிகமாகும்.

பீட்ரூட் சாப்பிடுவதால் உடல் சோர்வு மற்றும் மன சோர்வு ஆகியவையும் நீங்கும். 

பீட்ரூட் சாப்பிடுவதால் வேறென்ன நன்மைகள் கிடைக்கும்னு கமெண்ட்ல சொல்லுங்க!