‘பற்கள் பாதுகாப்பு முதல் புற்றுநோய் தடுப்பு வரை’ - காளான் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

உணவுக் காளான்களில் கலோரிகள், கொழுப்புகள் குறைவாகவே உள்ளன. அதே சமயம், நார்ச்சத்து, வைட்டமின் சி,பி,டி, பொட்டாசியம், கால்சியம் போன்ற சத்துக்கள் அதிகளவில் உள்ளன.

இரத்தத்தில் கலந்துள்ள அதிக அளவிலான கொழுப்பைக் குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்தும் தன்மைக் கொண்டது, காளான்.

காளானில் உள்ள ரிபோநியூக்ளியோடைட்கள்,  குளூட்டோமேட்கள் ஆகியவை இதயக்கோளாறுகள் ஏற்படுவதை கட்டுப்படுத்த பயன்படுகிறது. உயர் இரத்த அழுத்தத்தையும் கட்டுப்படுத்துகிறது.

வாதம், மூட்டுவலி, மலட்டுத்தன்மை ஆகியவற்றுக்கும் சிறந்த நிவாரணியாக காளான் உள்ளது.

காளான் தொடர்ந்து சாப்பிடுவதால் அதில் உள்ள மைக்ரோஃபேஜ்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகமாக்கும்.

காளானை தினமும் சாப்பிடுவதால் உடல் எடை குறையும்.

காளானில் உள்ள லெண்டினன் என்ற மூலக்கூறு புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்க உதவுகிறது.

காளானில் உள்ள வைட்டமின் டி, செலினியம், ஆன்டி ஆக்ஸிடன்கள், தாமிரம் ஆகியவை முடி உதிர்தலை தடுத்து அவை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வளர உதவுகிறது.

காளானில் மற்ற காய்கறிகளைவிட வைட்டமின் டி அதிகளவில் உள்ளது. இது எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது.

காளானில் உள்ள ஹைலூரானிக் அமிலம் என்ற அமிலம் சருமங்களை எப்போதும் ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது.

வாய்ப்புண், வயிற்றுப்புண் உள்ளிட்ட உள் உறுப்புகளில் ஏற்படும் புண்களை குணப்படுத்தவும் காளான் பயன்படுகிறது.

பி.கு: அனைத்து வகை காளான்களையும் உண்ண முடியாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். காளான் சாப்பிடுவதால் சிலருக்கு அலர்ஜி போன்ற பிரச்னைகள்கூட ஏற்படும். எனவே, அவர்கள் காளானை தவிர்ப்பது நல்லது.