‘தர்பூசணியில் இவ்வளவு நன்மைகளா?!’ - இதெல்லாம் தெரிஞ்சா இன்னும் அதிகமா சாப்பிடுவீங்க!

கோடைக்காலத்தில் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று, தர்பூசணி. அந்த தர்பூசணியில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது தெரியுமா?

தர்பூசணியில் லைக்கோபீன் என்ற ஆன்டிஆக்ஸிடென்ட் அதிகம் உள்ளது. இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதில் உள்ள பொட்டாசியம் மாரடைப்பு வராமலும் தடுக்கிறது.

தர்பூசணியை அதிகம் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறையும்.

தர்பூசணியில் பீட்டா கரோட்டின், வைட்டமின் சி, லூடீன், சியாக்ஸன்தின் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. இது கண்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கோடைக் காலங்களில் உடலில் நீர்ச்சத்து வேகமாக குறையும். இதனைத் தடுக்க தர்பூசணியை அதிகம் சாப்பிடலாம்.

தர்பூசணியில் உள்ள லைக்கோபீன் எலும்பை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது.

தர்பூசணியை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்படும்.

கர்ப்பிணி பெண்கள் தர்பூசணியை அதிகளவு சாப்பிட்டால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு நல்லது.

தர்பூசணியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னைகள் நீங்கும்.

தர்பூசணியில் உள்ள் லைக்கோபீன், பீட்டா கரோட்டின் ஆகியவை சரும வறட்சியைப் போக்கி அதனை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

தர்பூசணியில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதால் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

தர்பூசணி சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் வேறு நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரிந்தால் மறக்காமல் கமெண்ட்ல சொல்லுங்க!