`உடல் எடை குறைப்பு முதல் சருமப்பிரச்னைகள் வரை’ - கத்தரிக்காய் சாப்பிடுவதால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
பெரும்பான்மையானவர்கள் கத்தரிக்காயை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளமாட்டார்கள். ஆனால், இவ்வளவு நன்மைகள் இருப்பது தெரிந்தால் கண்டிப்பாக உணவில் சேர்த்துக்கொள்வீர்கள்.
கத்தரிக்காயில் அதிக அளவில் நீர்ச்சத்தும் குறைந்த அளவில் கலோரிகளும் உள்ளதால் உடல் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வராது.
கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் சி, இரும்புச்சத்து ஆகியவை நரம்புகளுக்கு மேலும் வலுவைச் சேர்க்க பயன்படுகிறது.
உடலில் ஆரம்பக்கட்டத்தில் ஏற்படும் சிறுநீரகக்கற்களை அகற்றவும் கத்தரிக்காய் உதவுகிறது.
கத்தரிக்காயில் போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
புற்றுநோய் வராமல் தடுக்கவும், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கவும் உதவும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.
கத்தரிக்காய் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் டைப் 2 சர்க்கரை நோயை அதிகளவில் தடுக்கும்.
கத்தரிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும்.
கத்தரிக்காயில் இரும்பு, கால்சியம் சத்துக்களும் அதிகளவில் உள்ளன. இதனால், எலும்பு வலுப்பெற உதவும்.
சருமத்தை மென்மையாக வைத்திருக்கவும் கத்தரிக்காய் உதவுகிறது.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், பசியின்மை, தோல் மரப்புத்தன்மை, மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் கரகரப்பானகுரல் ஆகியவற்றையும் ஓரளவுக்கு குணப்படுத்தும் வல்லமை கத்தரிக்காய்க்கு உண்டு.
பி.கு: கத்தரிக்காயை முடிந்த அளவு பிஞ்சாக இருக்கும்போது வாங்கி சாப்பிடுவது நல்லது. முற்றிய காயால் உடல் அரிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உடலில் சொறி சிரங்கு உள்ளவர்களும் இந்தக் காயை தவிர்ப்பது நல்லது.