கேப்டன் விஜயகாந்தின் மறுபக்கம்!

இன்னைக்கு இருக்குற 2கே கிட்ஸ்க்கு கேப்டன் விஜயகாந்தைக் கோபப்படுற ஒரு மீம் மெட்டீரியலாத்தான் தெரியும். 90'ஸ் கிட்ஸ்க்கு கூட ஒரு நடிகராத்தான் தெரியும். ஆனால், நடிகர், அரசியல்வாதி, கோபப்படுறவர்னு பல முகங்களைத் தாண்டி இவருக்கு இன்னொரு பக்கமும் இருக்கு.

சின்சியாரிட்டி

Arrow

ஷூட்டிங்குக்கு சரியான சமயத்தில் ஆஜராகிவிடுவார். ஒருமுறை எஸ்.பி ஜனநாதன் உதவி இயக்குநரா வேலை பார்த்த நேரத்துல, விஜயகாந்த் மினிஸ்டர்கிட்ட பேசிகிட்டிருந்தாராம். ஷாட்டுக்கு எஸ்.பி.ஜனநாதன் அழைக்க, போனைக் கட் பண்ணிட்டு ஷாட்டுக்கு வந்திருக்கிறார் விஜயகாந்த்.

அதேபோல் எப்போ ஷூட்டிங்னாலும் ஷாட் ரெடியானு டைரக்டர்கிட்ட அடிக்கடி கேட்கும் நபர் விஜயகாந்த். கடைசி வரைக்கும் டைரக்டர் என்ன சொல்றாரோ அதை மட்டும் கேட்டுக்கிட்டு நடிச்சவர். பாரபட்சம் பார்க்காமல் உதவி இயக்குநர்கள், லைட்மேன்கள் என சக கலைஞர்களுடன் படுத்து உறங்குவார்.

கர்ணனின் குணம்!

Arrow

எம்.ஜி.ஆர் தன்னைப் பார்க்க யார் வந்தாலும் அவர்களைச் சாப்பிட வைக்காமல் திருப்பி அனுப்பமாட்டார். அவரைத் தொடர்ந்து அந்த பழக்கத்தைக் கடைபிடித்தவர், விஜயகாந்த். அதற்கு தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருந்த விஜயகாந்த் அலுவலகமே சாட்சி.

ஒரு நாள் காலை 9 மணி டு இரவு 10 மணி வரை விஜயகாந்த் வீட்டில் ஐ.டி ரெய்டு நடந்திருக்கிறது. முடிவில், தலைமை அதிகாரி ராபர்ட் ' சார் உங்களைத் தொல்லை பண்ணனும்னு நினைக்கலை. இது எங்க டூட்டி. உங்க ரெக்கார்ட்சை பார்க்குறப்போ எவ்வளவு நல்லது பண்ணியிருக்கீங்கனு தெரியுது. அதை எப்பவுமே நிப்பாட்டிடாதீங்க'னு நெகிழ்ந்திருக்கிறார்.

என்றைக்குமே 'மடியில கனமில்ல, வழியில பயமில்ல'ங்குற வார்த்தையை எல்லா மேடைகளிலும் சொல்பவர் விஜயகாந்த். அதை தன் வாழ்க்கையில் கடைபிடிக்கவும் செய்வார்.

அதேபோல இவர் பிறருக்கு உதவும் செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். தனது பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் வறுமை ஒழிப்பு தினமாகக் கொண்டாடி வருகிறார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

சீட்டாட்டம்!

Arrow

விஜயகாந்த் ஆடும் சீட்டாட்டத்துக்கு பின்னால் ஒரு கதை இருக்கிறது. உதவி இயக்குநர்கள், தொழிலாளர்களை சீட்டாட அழைப்பார் விஜயகாந்த். பந்தயமும் கொஞ்சம் பெரியதாக இருக்கும். விளையாட்டில் ஆரம்பத்தில் விஜயகாந்த் ஜெயிப்பதுபோலவே இருக்கும். ஆனால் முடிவில் தோற்றுவிடுவார்.

தான் ஆட்டத்துக்காக கட்டிய பணத்தை முழுமையாக எதிராக ஆடுபவருக்கு கொடுத்துவிடுவார். பெரிய தொகையை கட்டும்போதெல்லாம் ஏமாறுவது கேப்டனின் வாடிக்கை.

ஷூட்டிங்கில் குடும்பம் மற்றும் அவசரத் தேவைகளுக்காக பணம் தேவைப்படும் தொழிலாளர்கள் கேப்டனிடம் கேட்க கூச்சப்பட்டும், தன்மானம் கருதியும் ஒதுங்கி நிற்பார்கள்.

அதைத் தெரிந்து கொண்ட விஜயகாந்த் சீட்டாட்டத்துக்கு அழைத்து விளையாடினால், வேண்டுமென்றே தோற்று பணத்தை தொழிலாளர்களுக்கு கொடுத்து விடுவார்.

உதவி தேவைப்பட்டு தன்மானம், கூச்சம் கருதி கஷ்டப்படும் தொழிலாளர்களுக்கு பணத்தைக் கொடுக்க கேப்டன் யூஸ் பண்ணின இன்னொரு வழிதான் சீட்டாட்டம்.