எப்போதும் ஸ்லிம்மாக இருக்கும் தமன்னா எடைகூடியது இதனால் தானா?

தமன்னா என்றாலே பால் வண்ண மேனியும் அவரது சிற்றிடையும்தான் நினைவுக்கு வந்துபோகும். அப்படிப்பட்ட தமன்னா இப்போது உடல் எடை கூடிப்போயிருக்கிறார். இடையில் அவரது `இடையில்’ என்ன நடந்தது..? பார்க்கலாம்.

எல்லோரது வாழ்விலும் எப்படி கொரோனா வைரஸும் அதனால் ஏற்பட்ட ஊரடங்குகளும் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியதோ அதேபோலத்தான் தமன்னா வாழ்விலும் விளையாடியிருக்கிறது.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

கொரோனாவுக்கு முன்புவரை தனது உடல் வாகை பக்காவாக பராமரித்துவந்தார் தமன்னா.  ஆனால் கடந்த ஆண்டு பரவிய கொரோனா இரண்டாம் அலையில் தமன்னாவுக்கும் தொற்று ஏற்பட்டது. கடும் சிகிச்சைகளுக்குப் பிறகே அதிலிருந்து மீண்டார்.

அடுத்த சில மாதங்கள் முழுக்க ஓய்வில் இருந்த தமன்னா, இந்த ஆண்டு தொடக்கத்தில் தன்னுடைய வழக்கான பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார். அப்போது வெளியான புகைப்படங்கள் எல்லாவற்றிலும் தமன்னா முன்புபோல ஸ்லீம்மாக இல்லாமல் சற்றே எடைகூடியவராகத் தெரிருந்தார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் விஷயம் தெரியாமல் கிண்டலடிக்கத் தொடங்கினார்கள்.

கொரோனா தொற்றுக்கொள்ளானதில் தமன்னா எடுத்துக்கொண்ட சிகிச்சைகளும்  அதனால் ஏற்பட்ட மன உளைச்சல்களும் பக்கவிளைவுகளுமே அவரது உடல் எடை கூட காரணமாக அமைந்திருக்கிறது.

நெட்டிசன்கள் கிண்டலால் மனமுடைந்த தமன்னா, ``எப்படி அவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது..? கொரோனா தொற்றுக்குள்ளானதில் நான் மிகவும் பயந்துபோய்விட்டேன். தொடர்ந்து மரண பயத்தில் இருந்தேன். மருத்துவர்கள் என்னைப் போராடி மீட்டனர்” என வருத்தத்துடன் பகிர்ந்திருந்தார்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

இதைத்தொடர்ந்து தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என முடிவெடுத்த தமன்னா. அடுத்த இரண்டே  மாதங்களில் கடுமையான ஜிம் வொர்க் அவுட்டில் மூழ்கி வெகு விரைவில் தனது பழையத் தோற்றத்துக்கு மாறிப்போனார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு தமன்னா பேட்டி கொடுத்திருந்தபோது அதில் உடல் எடைக் கூடிப்போய் காணப்பட்டார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் அவரை மீண்டும் கிண்டலடிக்கத் தொடங்கியிருக்கின்றனர். இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை.