அஜித் - சரண், கூட்டணியின் ஹைலைட்ஸான மொமெண்ட்ஸ்!

நடிகர் அஜித் - இயக்குநர் சரண் கூட்டணியில் மூன்றாவது படமாக வெளியான அட்டகாசம் திரைப்படம், வெளியாகி 17 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. நான்கு படங்களாக தொடர்ந்த இவர்களது கூட்டணியின் ஹைலைட்ஸான மொமெண்ட்ஸ் இதோ...

முதல் படமான காதல் மன்னன், பட்ஜெட்டை விட பல மடங்கு லாபம் ஈட்டியதோடு அஜித்திற்கு அதிகமான ரசிகைகள் உருவாகவும் காரணமாக இருந்தது.

காதல் மன்னன் படம் அதிக வசூல் ஈட்டினாலும் தயாரிப்பாளருக்கு நஷ்டமே ஏற்பட்டிருக்கிறது. அதனால், அமர்க்களம் படத்திற்கு சம்பளம் வாங்காமல் நடித்தார் அஜித்.

அமர்க்களம் படத்தில் ஜோடியாக நடித்த அஜித்தும் ஷாலினியும், படப்பிடிப்பின் போது காதலாகி பிறகு திருமணமும் செய்து கொண்டதால் அஜித்தின் ரசிகர்களுக்கு இந்தப் படம் இப்போதும் ஃபேவரைட்.

தீனா படத்திலேயே அஜித்திற்கு ‘தல’ என்கிற பட்டத்தை கொடுத்திருந்தாலும், அட்டகாசம் படம் மூலம்தான் ‘தல’ என்கிற வார்த்தை அதிகம் பிரபலமானது. ‘தல போல வருமா’, ‘தீபாவளி தல தீபாவளி’ என அஜித்திற்காகவே பாடல் வரிகள் எழுதப்பட்டிருக்கும்.

அட்டகாசம் படத்திற்கு பிறகு அசல் படத்திலும் இரட்டை வேடங்களில் நடித்திருந்த அஜித், அசல் படத்தில் வயதான வேடத்தில் சில காட்சிகளே வந்திருந்தாலும் ரசிகர்களீன் ஃபேவரைட் கேரக்டராக இருந்தது.

அஜித் - சரண் கூட்டணியில் உருவான நான்கு படங்களுக்கும் பரத்வாஜ்தான் இசையமைப்பாளர். இந்தப் படங்களின் பாடல்களை இன்று வரை ரசிகர்கள் மறக்காமல் இருப்பதே இந்தக் கூட்டணியின் மிகபெரிய வெற்றி.

கே.பாலசந்தரின் `சிந்து பைரவி’ ஏன் கொண்டாடப்பட்டது – 4 காரணங்கள்!