மாரி செல்வராஜ், இந்தக் கதையை தயாரிப்பாளர்களிடம் சொல்லும்போது முதல் சீன்லயே வேற கதை இல்லையானு கேப்பாங்களாம். இன்னைக்கு நிறைய படங்கள் இதன் தாக்கத்துல வருது.
பரியேறும் பெருமாள் கிளைமேக்ஸ்ல டீ கிளாஸ் ஷாட் ஒண்ணு வரும். அதைப் பார்த்துட்டு பாரதிராஜா, “பின்னிட்டான். என்னடா பாரதிராஜா”னு பாராட்டுவாரு. ஒரு ஃப்ரேம்ல சமத்துவம் சொன்னது, மாரிதான்.
ஒடுக்கப்படும் மக்களின் பார்வைல இருந்து அவங்க வாழ்க்கையை சொன்ன படங்கள் ரொம்பவே குறைவு. அதுவும் கடந்த 10 வருடங்கள்ல இல்லைனே சொல்லலாம். அதை உடைச்சது பரியேறும் பெருமாள்.
பொதுவாவே படிப்பு முக்கியம் இல்லைன்ற விஷயங்கள் தமிழ் சினிமால சொல்லப்படுவதுண்டு. அதை தூக்கி எறிஞ்சு, பேய் மாதிரி படிக்கணும்னு சொன்னது பரியேறும் பெருமாள்.
பரியேறும் பெருமாள் ரிலீஸ் ஆகி இவ்வளவு நாளாகியும் கறுப்பி ஒடுக்கப்பட்ட மக்களை ரெப்ரசண்ட் பண்ணுது. இன்னும் பல ஆண்டுகள் இந்தக் குறியீடு நின்னு பேசும்.
பொதுவாவே படிப்பு முக்கியம் இல்லைன்ற விஷயங்கள் தமிழ் சினிமால சொல்லப்படுவதுண்டுஅதை தூக்கி எறிஞ்சு, பேய் மாதிரி படிக்கணும்னு சொன்னது பரியேறும் பெருமாள்.
நாட்டுப்புற கலைஞர்களை பெரும்பாலும் செலிபிரேட் பண்ண மாட்டாங்க. பரியனுக்கும் அந்தத் தயக்கம் இருக்கும். அதை பரியனை வைச்சே உடைச்சது, செம சீன். நம்ம மனசும் மாறும்.
டீ கிளாஸ்க்கு இடையில கிடக்குற ‘பூ’ மாதிரி, படத்துல பரியன் - ஜோ. காதலுக்கும் நட்புக்கும் அப்பால் ஒரு உறவை சொல்லியிருப்பாங்க. செல்வராகவனுக்கு அடுத்து இதை அழகா சொன்னது மாரிதான்.
பரியனை வீட்டுக்குக் கூப்பிட்டு அவனை அசிங்கப்படுத்துறதுக்கு காரணம் சாதிய மனநிலைனு காமிச்சதும், அந்த மனநிலைக்கு உருவம் கொடுத்த மாதிரி தாத்தா கேரக்டரை கொண்டு வந்ததும் மாரியின் தெளிவான புரிதல்.