சுப்ரமணியபுரம்  எனும் கல்ட்  கிளாசிக் சினிமா!

சுப்ரமணியபுரம் வெளியாகி 14 வருடங்கள் ஆகப்போகுது. எப்போ ரீவிசிட் பண்ணாலும் ராவா அதே எனர்ஜியோட இருக்கு. தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்கள்ல ஒண்ணு.

80களின் மதுரையை அப்படியே கண்முன் கொண்டுவந்த படத்தின் செட் ஒர்க் நிச்சயம் இந்தப் படத்தின் வெற்றிக்கு பெரிய தூண் என்று சொல்லலாம். அந்தக் காலத்து புகைப்படங்களை நிறைய சேகரிப்பதில் தொடங்கி அப்போதைய பஸ், ஆட்டோக்களை விலைக்கு வாங்கி பயன்படுத்தியது வரை தயாரிப்பாளராக பெரிய அளவில் மெனக்கெட்டிருக்கிறார் சசிகுமார்.

அப்போதைய திருவிழாக்கள், கல்யாணங்கள் எப்படி நடந்தது என்று பார்க்க பழைய வி.ஹெச்.எஸ் டேப்களை விலைக்கு வாங்கிப் பார்த்திருக்கிறார்கள்.

கதைக்களம் மதுரை சுப்ரமணியபுரம் என்றாலும் படத்தின் ஷூட்டிங் நடந்தது திண்டுக்கல் பாரதிபுரத்தில். பீரியட் படம் என்பதால் கேபிள் வயர்கள் கேமராவில் தெரியக்கூடாது என்று மாலை ஆறு மணி வரை கேபிளைக் கட் செய்துகொள்ள அந்த ஊர் மக்கள் சம்மதித்தாக நெகிழ்கிறார் சசிகுமார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

வழக்குகள் காரணமாக மூடிக்கிடந்த அந்த தியேட்டரில் எடுக்க முடியாமல் போக செண்ட்ரல் தியேட்டரை செட் போட்டு எடுத்திருக்கிறார்கள். இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் படத்தில் வரும் கட் அவுட்டில் அப்போதைய ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளின் பெயர்களையே வைத்திருந்தார்.

அழகர், பரமன், காசி, டும்கான் என படத்தில் நடித்தவர்களின் இயல்பான முகங்கள் படத்தின் வெற்றிக்குக் கை கொடுத்தது. ஒவ்வொரு கேரக்டருக்கும் ஆட்களைத் தேர்வு செய்வதில் ரொம்பவே மெனக்கெட்டிருப்பார் சசிகுமார்.

குறிப்பாக கஞ்சா கருப்பு. க்ளைமேக்ஸில் அப்படி ஒரு துரோகத்தை இந்த கதாபாத்திரம் செய்யும் என்று யாருக்கும் துளியும் சந்தேகம் வராதவாறு இருந்ததன் காரணம் அந்தக் கேரக்டரை கஞ்சா கருப்பு செய்ததனால்தான்.

கேரக்டர்களின் நடிப்பு நம்பும்படியாக இருந்ததற்கு இன்னொரு காரணம் சசிகுமாரரின் டெக்னிக். கதையை யாருக்கும் சொல்லவில்லை. குறிப்பாக கிளைமேக்ஸ். இதுதான் கிளைமேக்ஸ் என்று தெரிந்தபிறகு சுவாதி 'ஏன் முதல்லயே சொல்லல' என்று கேட்டு சசிகுமாரிடம் அழுதிருக்கிறார். 'முதல்லயே தெரிஞ்சிருந்தா கண்கள் இரண்டால் ரொமான்டிக்கா வந்திருக்காது' என்று சமாதானப்படுத்தியிருக்கி-றார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

அழுதுகொண்டிருக்கும் துளசிக்கு அருகில் கையில் கத்தியுடன் பரமன் உட்கார்ந்திருப்பார். டிரெய்லரில் வந்த இந்தக் காட்சியை வைத்துக்கொண்டு கிளைமேக்ஸில் துளசியை பரமன் வெட்டிக்கொல்வார். அது, சென்சாரில் கட் ஆகிவிட்டது என்று ஒரு செய்தி இன்றும் சுற்றிக்கொண்டிருக்கிறது. படத்தில் இடம்பெறாத இந்தக் காட்சிக்குப் பின்னால் ஒரு குட்டி பிளாஷ்பேக் இருக்கிறது.

சுப்ரமணியபுரம் ஷூட்டிங்கில் முதல் சில நாட்களுக்கு காலையில் கண்கள் இரண்டால் பாடலும் மாலையில் காதல் சிலுவையில் பாடல்களுக்குமான காட்சிகளை எடுத்தார் சசிகுமார். வெறுத்துப்போன சுவாதி, 'என்ன சார் எப்ப பாரு நடக்குறது, பார்க்குறது இப்படியே போயிட்டு இருக்கு' என்று சசிகுமாரைக் கலாய்த்திருக்கிறார்.

மறுநாள் சசிகுமார் ஸ்கிரிப்டிலேயே இல்லாத ஒரு காட்சியை எடுக்க நினைத்தார். அதுதான் பரமன் துளசியை துரத்தும் காட்சி. 'அது நன்றாக வந்ததால் படத்தின் ட்ரெய்லரில் மட்டும் வைத்திருந்தேன். மற்றபடி அது சும்மா எடுத்தது' என்று சொன்னார் சசிகுமார்.