`நான் தமிழ்ல பேசுனா உனக்கு எதாவது புரியுமாடா?!’ - `தமிழன்டா’ தக் லைஃப் மொமண்ட்ஸ்!

இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழகம் எப்போதும் முன்னணியில் இருந்து தனது எதிர்ப்பைக் கடுமையாகப் பதிவு செய்தே வந்திருக்கிறது. இதற்கு எதிராக பல மாநிலங்களில் இருந்தும் குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இந்தித் திணிப்புக்கு எதிராக மேடையில் நடந்த சில `தமிழன்டா’ தக் லைஃப் மொமண்ட்ஸ் இங்கே...

சிங்கப்பூரில் 2012-ம் ஆண்டு ஐஃபா விருதுகள் விழா நடந்தது. பல மொழிகளைச் சேர்ந்த நடிகர்கள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். ஆனாலும், இந்தியில் மட்டும்தான் விழாவை தொகுத்து வழங்கினர். மேடை ஏறி வந்த பிரபலங்களும் இந்தியிலேயே பேசினர். இந்த நிலையில், ரன்வீர் கபூருக்கான சிறந்த விருது வழங்க ஏ.ஆர்.ரஹ்மான் மேடையேறி வந்தவர், தமிழில் விருதை அறிவித்தார். செம மாஸ்ல!

சோனி லைவ் சேனலில் 2013-ம் ஆண்டு ஐ.பி.எல் ஒளிபரப்பில் ஸ்ரீகாந்த், நவ்ஜோத் சிங் சித்து வர்ணனையாளராக கலந்துகொண்டனர். சித்து இந்தியிலேயே பேசிக்கொண்டிருந்தார். அப்போது, ஸ்ரீகாந்த் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் பிற மொழி மக்களுக்காக ஆங்கிலத்தில் நீங்கள் சொன்னதை டிரான்ஸ்லேட் பண்ணுங்கனு சொன்னாரு. அதுக்கு சித்து `99 % மக்களுக்கு இந்தி புரியும். ஏன்னா, இந்தி இந்தியாவின் மொழி’னு சொன்னாரு. உடனே, ஸ்ரீகாந்த், `நான் தமிழ்ல பேசுனா உனக்கு எதாவது புரியுமாடா?’ அப்டினு கேட்டு அதகளம் பண்ணிருந்தார்.

என்.டி.டி.வி-யில் 2014-ம் ஆண்டு இந்தியை தேசிய மொழியாக அறிவிப்பதில் உள்ள சிக்கல் குறித்து விவாதம் நடந்தது. இதில் தமிழ்நாடு சார்பாக பத்திரிக்கையாளர் ஞானி கலந்துகொண்டார். அனைவரும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, சித்ராஜி என்பவர் இந்தியில் பேச ஆரம்பித்தார். உடனே, ஞானி அதை எதிர்த்து தமிழில் பேச ஆரம்பித்தார். இது இந்தியைத் திணிக்க நினைப்பவர்களுக்கு தக்க பதிலடியாக அமைந்தது.

கோவாவில் 2019-ம் ஆண்டு நடந்த இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் டாப்ஸி கலந்துகொண்டு பேசினார். அவர் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர் ஒருவர், `நீங்க இந்தி நடிகைதான... இந்தியில் பேசுங்க!’னு சொல்ல... உடனே, டாப்ஸி `நான் தென்னிந்திய நடிகையும்தான். தமிழ், தெலுங்குல பேசட்டுமா?’னு கேட்டாங்க. இந்த வீடியோ சமூக வலைதளங்களிலும் செம வைரல்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

சமூக வலைதளங்களில் `இந்தி தெரியாது போடா’ என்ற வாசகம் அடங்கிய டீ ஷர்ட் செம டிரெண்டிங்கில் இருந்த சமயம் அது. அப்போது, தந்தி டிவியில் ஆயுத எழுத்து நிகழ்ச்சி விவாதம் ஒன்றில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டீ ஷர்ட்டை அணிந்து உட்கார்ந்திருந்தார். நிகழ்ச்சியின் நெறியாளர் இதைக் குறிப்பிட்டுக் கேட்க. `இந்தி தெரியாது போடா’ என்று தில்லாக பதிலளித்தார்.

ஜல்லிக்கட்டுக்கு தொடர்பான விவாதங்கள் இந்தியா முழுவதும் எழுந்த சமயம் சிஎன்என் நியூஸ் 18 சேனலில் இதுதொடர்பாக விவாதம் நடந்தது. அதில் பிரபல கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் கலந்துகொண்டு பேசினார். அப்போது, `பாக்ஸிங்கில் மனிதர்கள் ஒருவரை ஒருவரை தாக்கி நாக் அவுட் செய்கின்றனர். இது வன்முறை இல்லையா?’ என்று கேள்வி எழுப்பினார். அதோடு மட்டுமல்லாமல் அந்த நிகழ்ச்சியில் நெறியாளரான தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜக்கா ஜேக்கபைப் பார்த்து, `நீ தமிழன்தான, உனக்குத் தெரியும்ல?’ என்றார். பிரபல வட இந்திய ஊடகத்தில் தமிழில் பேசியது பலரது கவனத்தையும் ஈர்த்தது.

99 சாங்க்ஸ் படத்தின் ஆடியோ லாஞ்சின்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர் அந்தப் படத்தின் ஹீரோவை இந்தியில் வரவேற்றார். இதைப் பார்த்த ஏ.ஆர்,ரஹ்மான் `இந்தி?’ என்ற ஒற்றை வார்த்தையுடன் கீழே இறங்கினார். இந்த வீடியோவும் சமூகவலைதளங்களில் செம வைரல்!

இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த உங்களது ஃபேவரைட் தக் லைஃப் மொமண்ட் எதுனு மறக்காமல் கமெண்ட் பண்ணுங்க!