உடல் எடைகுறைப்பு மட்டுமல்லாது, இதய ஆரோக்கியம், மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துவது என பல்வேறு பலன்கள் இந்த முறையில் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன.
Intermittent Fasting என்பது உணவு எடுத்துக் கொள்ளும் நேரத்தைக் குறிப்பிட்ட கால அளவு என நிர்ணயம் செய்து, அந்த கால அளவுக்குள் மட்டுமே உணவு எடுத்துக்கொள்ளும் வழக்கம்.
உடல் எடைக் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மக்கள் இந்த Intermittent Fasting முறையைக் கடைபிடிக்கிறார்கள்.
இதில், Alternate-day fasting, 5:2 fasting மற்றும் Daily time-restricted fasting என்று மூன்று வகைகள் இருக்கின்றன.
Alternate-day fasting என்பது ஒருநாள் வழக்கமான உணவு எடுத்துக் கொண்டு, மற்றொரு நாள் மொத்தமாக உணவைத் தவிர்த்துவிடுவது அல்லது குறைந்தபட்ச உணவு எடுத்துக்கொள்வது.
5:2 fasting என்றால், வாரத்தின் ஐந்து நாட்களில் வழக்கமான உணவை எடுத்துக் கொண்டு, இரண்டு நாட்கள் முழுமையாக உணவு எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது.