‘சரும வறட்சியால அதிகளவு பாதிக்கப்படுறீங்களா?’ - இந்த டெக்னிக்லாம் முயற்சி பண்ணுங்க!

இன்றைக்கு பெரும்பான்மையானவர்கள் ட்ரை ஸ்கின் பிரச்னையால் பாதிப்படைகின்றனர். ட்ரை ஸ்கின் பிரச்னையை போக்க சில எளிதான வழிகள் இங்கே...

அவகேடாவை அரைத்து அதனுடன் ஆலிவ் எண்ணெய், தேன் கலந்து ஃபேஸ் மாஸ்க் போல அணிந்து சுமார் 30 நிமிடங்கள் உலர விட்டு முகத்தைக் கழுவினால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

முகத்தில் ஏற்படும் பருக்கள், சரும வறட்சி போன்றவற்றைத் தடுக்க பலரும் மாய்ஸ்சரைஸரை பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்.

ஓட்ஸில் தேனைக் கலந்து கொஞ்சம் வெதுவெதுப்பாக்கி முகத்தில் மாஸ்க் போல அணிந்து உலரவிட்டு முகத்தைக் கழுவினால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் கொஞ்சம் தேங்காய் எண்ணெயை சேர்த்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் முகம் ஈரப்பதத்துடன் இருக்கும்.

முட்டையில் உள்ள மஞ்சள் கருவை மட்டும் எடுத்து அதனை முகத்தில் தடவி கொஞ்சம் நேரம் உலரவிட்டு பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவலாம்.

 அவகேடா மற்றும் பப்பாளியுடன் தேன் கலந்து முகத்தில் அப்ளை செய்து சிறிதுநேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவலாம்.

அதிகளவில் தண்ணீரைக் குடிக்கலாம். இதனால், சரும வறட்சி கொஞ்சம் கொஞ்சமாக மாறும். அதேபோல பாலும் அதிகளவு எடுத்துக்கொள்ளலாம்.

நீர்ச்சத்துள்ள பழங்களை அதிகளவில் தினமும் சாப்பிடலாம்.

கெமிக்கல் அதிகம் பயன்படுத்தப்பட்ட சோப்புகளும் சரும வற்ட்சிக்கு காரணமாக அமையலாம். எனவே, இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட சோப்பை முடிந்த வரை பயன்படுத்தலாம்.

சருமத்துக்கு சிறந்த மாய்ஸ்சரைஸராக பெட்ரோலியம் ஜெல்லி பயன்படுகிறது. இதனை பயன்படுத்தியும் சரும வறட்சியை நீக்கலாம்.

சரும வறட்சியைப் போக்க நீங்க என்னலாம் டெக்னிக்கை பயன்படுத்துறீங்கனு கமெண்ட்ல சொல்லுங்க!