இன்னைக்கு இருக்குற முக்கிய பிரச்னைகளில் ஒன்று, மொபைல் அடிக்ஷன். அதுல இருந்து மீண்டு வர்றது ரொம்பவே கஷ்டம். ஆனால், சில எளிதான வழிகள் மூலம் அடிக்ஷன்ல இருந்து மீண்டு வரலாம்.
மொபைல்ல நோட்டிஃபிகேஷன் வந்தா அடிக்கடி அதை எடுத்துப் பார்க்கத் தோணும். அதனால, நோட்டிஃபிகேஷனை ஆஃப் பண்ணி வைச்சிடுங்க.
ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற ஆப்களை அடிக்கடி யூஸ் பண்றீங்கனா, அதை அன் இன்ஸ்டால் பண்ணுங்க. அவசியம் தேவைப்படும்போது Web-ல் லாக் இன் செய்து பயன்படுத்தலாம்.
நீங்க எவ்வளவு நேரம் மொபைல் யூஸ் பண்றீங்கனு நோட் பண்ணுங்க. அதை கண்ட்ரோல் பண்றதுக்கான ஆப்களை டௌன்லோட் பண்ணி, உங்களோட யூஸிங் டைமை கொஞ்சம் கொஞ்சமா குறைங்க.