‘சின்ன விஷயம்... பெரிய பாதிப்புகள்!’ - ரிலேஷன்ஷிப்பில் நீங்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டிய 5 விஷயங்கள்!

சின்ன சின்ன தவறான புரிதல்கள்தான் ரிலேஷன்ஷிப்பில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க எளிமையான சில வழிகள் இங்கே...

பொதுவாக உங்கள் ரிலேஷன்ஷிப்பில் பிரச்னைகள் வரும்போது அமைதியாக இருப்பதை தவிர்த்துவிட்டு, பிரச்னைக்கான காரணத்தை உடனே பேசி சரி செய்யலாம். அமைதியாக இருப்பது ரிலேஷன்ஷிப்பில் விரிசலை இன்னும் அதிகமாக்கும்.

 ஒவ்வொருத்தருக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே, நீங்கள் காதலிப்பவரை மற்றவர்களுடன் ஒப்பிட்டு பேசுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

நீங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்களுடன் ஆர்கியூமெண்ட் ஏற்படும்போது அதில் வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். உங்களது காதலரின் கருத்து சரியாக இருக்கும்பட்சத்தில் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எந்த காரணத்துக்காகவும் உங்களது சுயத்தை நீங்கள் இழக்கக்கூடாது என்பதில் கவனத்தைக்கொள்ள வேண்டும். உங்களை நீங்கள் இழக்கும்பட்சத்தில் அதிலிருந்தே சில பிரச்னைகள் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களது காதலுக்காக உங்களது கனவுகளை அல்லது தேவைகளை விட்டுக்கொடுக்கலாம் என்ற எண்ணத்தை கைவிட வேண்டும். பிற்காலத்தில் இதுவே உங்களுக்கு உருத்தலாக அமையும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

ரிலேஷன்ஷிப்ல வர்ற பிரச்னைகளை வேற எப்படிலாம் சிம்பிளா சரி பண்ணலாம்னு கமெண்ட்ல சொல்லுங்க!