வீட்டிலிருந்தபடியே பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்… A to Z வழிமுறைகள்!

பாஸ்போர்ட் விண்ணப்பித்து அதைப் பெறுவது என்பது பலருக்கு சிக்கலான நடைமுறையாகவே தோன்றுகிறது. அரசின் சேவைகள் பலவும் ஆன்லைனிலேயே பெற முடியும் என்ற நிலையில், பாஸ்போர்ட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற முடியுமா என்பது பலரின் கேள்வியாக இருக்கிறது.

எளிதான முறையில் வீட்டிலிருந்தபடியே ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்து பாஸ்போர்ட்டைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசும், பாஸ்போர்ட் இயக்குநரகமும் வெளியிட்டிருக்கின்றன.

ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முன்பாக முக்கியமான சில ஆவணங்களை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்வது அவசியம்.

* ஆதார் அட்டை * பான் கார்டு * வாக்காளர் அடையாள  * அட்டை * ஓட்டுநர் உரிமம் * பிறப்பு சான்றிதழ்

பாஸ்போர்ட் – ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

புதிய பயனாளராக உங்களைப் பதிவு செய்துகொள்ள `New User Registration’ என்ற ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.

புதிய யூஸர் ஐடியை உருவாக்கி லாக்-இன் செய்த பிறகு Apply for Fresh Passport என்ற ஆப்ஷனை சொடுக்குங்கள்.

அதன்பிறகு வரும் விண்ணப்பத்தில் குடும்பம், முகவரி, அவசர தொடர்பு எண் போன்ற விவரங்கள் கேட்கப்பட்டிருக்கும். அதைக் கவனமாகப் பூர்த்தி செய்யவும்.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்த பிறகு `Pay & Schedule Appointment’ என்ற ஆப்ஷனைத் தேர்வு செய்யவும்.

அதன்பிறகு பாஸ்போர்ட் விண்ணப்பக் கட்டணத்தை எஸ்.பி.ஐ வங்கி சலான் வழியாகச் செலுத்துங்கள்.

பாஸ்போர்ட் சேவா கேந்திரத்துக்கு நேரில் உங்களுக்கான அப்பாயின்மெண்ட் தேதி, நேரம் வாரியாக ஒதுக்கப்படும். அங்கு செல்லும்போது உங்கள் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களின் ஒரிஜினலைக் கொண்டு செல்லுங்கள்.

உங்களுக்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, காவல்துறை சரிபார்ப்பு முடிந்தபிறகு சரியாக 15 முதல் 20 நாட்களில் பாஸ்போர்ட் தபாலில் வீடு தேடி வரும்.

கவிஞர் வாலியின் அசத்தல் கேமியோ ரோல்கள்..!