ஆதார் அட்டையில் இருக்கும் உங்களின் புகைப்படம் அடையாளம் தெரியாத அளவுக்கு இருக்கிறதா… அதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா.. ஆதார் அட்டையில் இருக்கும் போட்டோவை மாற்ற ஈஸியான வழி இருக்கிறது.
2. அந்தப் படிவத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களைப் பூர்த்தி செய்து, அருகில் இருக்கும் இ-சேவை மையம் அல்லது ஆதார் சேவா கேந்திராவுக்குச் சென்று அங்கிருக்கும் ஊழியரிடம் சமர்ப்பியுங்கள்.
3 அதன்பிறகு, உங்களின் ஆதார் அட்டை தகவல்கள், பயோமெட்ரிக் விவரங்கள் சரிபார்க்கப்படும்.
4. நீங்கள் கொடுத்திருக்கும் புதிய புகைப்படம் குறித்த தகவல்களையும் அங்கிருக்கும் ஊழியர் சரிபார்த்துக் கொள்வார்.
5 புகைப்படத்தை மாற்றும் சேவைக்காக ரூ.25 + ஜி.எஸ்.டி வரித் தொகை சேர்த்து கட்டணமாக நீங்கள் செலுத்த வேண்டும்.
6. உங்கள் விவரங்கள் சரிபார்த்து முடிக்கப்பட்ட பிறகு, அதை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் ஊழியர் உங்களுக்கு அதற்கான ரசீது (URN) ஒன்றைக் கொடுப்பார்.
7. அந்த ரசீதில் இடம்பெற்றிருக்கும் URN எண்ணைக் கொண்டு ஆதார் இணையதளத்தில் உங்களின் புகைப்படம் மாறியிருக்கிறதா என்பதை நீங்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.