‘வீக் எண்ட்ல என்ன பண்றதுனு தெரியலையா?’ - சரி... இதெல்லாம் ட்ரை பண்ணிப் பாருங்க!

லீவ் நாள் வந்ததும் நமக்கு சந்தோஷமா இருக்கும். ஆனால், அந்த நாள்ல என்ன பண்றதுனு ஒரு குழப்பம் வரும். அவங்க இந்த விஷயங்களை எல்லாம் ட்ரை பண்ணுங்க...

வீக் எண்ட் தானனு நினைச்சு அதிக நேரம் தூங்காதீங்க. அப்படி தூங்கினா அதுலயே உங்களோட வீக் எண்ட்ல பாதி நாள் முடிஞ்சிரு. அதனால, கொஞ்சம் சீக்கிரமா எழும்புங்க.

இன்னைக்கு இருக்குற சூழல்ல வீட்டுல இருக்குறவங்ககூட பேசவே நேரம் கிடைக்கமாட்டேங்குது. அதனால, வீக் எண்ட உங்களோட அம்மா, அப்பா, மனைவி மற்றும் பிள்ளைகளோட செலவிடுங்க. அவங்க பேசுறதை கொஞ்சம் காது கொடுத்து கேளுங்க. 

டெக்னாலஜிக்கு வாரத்துல ஒருநாளாவது நோ சொல்லுங்க. குறிப்பா வீக் எண்ட்ல. அதுக்கு பதிலா புக் படிங்க, நியூஸ் பேப்பர் வாங்கி படிங்க. உங்க வீட்டுல தோட்டம், செடி, மரம்னு எதாவது இருந்தா அதுக்கு போய் தண்ணி ஊத்துங்க.

உங்க ஊர்ல இருக்குற இயற்கையான இடத்துக்கு போய் அப்படியே கொஞ்சம் நடந்துட்டு வாங்க. மனசு அவ்வளவு அமைதியா இருக்கும்.

வார நாள்கள்ல அவசர அவசரமா சாப்பாடு சாப்பிட்டுட்டு ஓடுவோம். ஆனால், வீக் எண்ட்ல புடிச்ச உணவை சமைச்சு டைம் எடுத்து உட்கார்ந்து ரசிச்சு சாப்பிடுங்க.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

மனசையும் உடலையும் கொஞ்சம் ரிலாக்ஸா வைச்சுக்க யோகா கிளாஸ் போங்க. ஒரு மணிநேரம் அதுக்காக செலவிடலாம். தப்பில்ல.

நாளைக்கு வேலை இருக்கே... மீட்டிங் இருக்கே... என்ன பண்ணப்போறோம். அப்டின்றதை வீக் எண்ட்ல யோசிக்கிறதை நிப்பாட்டுங்க.

புதுமையான விஷயங்களை கத்துக்க ட்ரை பண்ணுங்க.

வழக்கமா வார நாள்கள்ல செய்ற விஷயங்களை வீக் எண்டலயும் செய்யாதீங்க. அது உங்களை போரா ஃபீல் பண்ண வைக்கும்.

எல்லாத்தையும் தாண்டி உங்களுக்காக, உங்களது சிந்தனைக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்குங்க. பாஸிட்டிவான தாட்ஸ வளர்க்க ட்ரை பண்ணுங்க.

வீக் எண்டை பயனுள்ளதா மாற்ற வேற என்ன பண்ணலாம்னு கமெண்ட்ல சொல்லுங்க!