வெயில் காலத்தில் ஏற்படும் மைக்ரேனை எப்படி தவிர்க்கலாம்..? சில வழிகள்!
வெயில் காலத்திலும் மைக்ரேன் பிரச்னைகள் ஏற்படும். அதனை நம் அன்றாட வாழ்வில் சில எளிய மாற்றங்களை செய்வதன் மூலம் தவிர்க்கலாம். சில ஐடியாக்கள்...
உங்களது உடலை எப்போதும் ஹைட்ரேட்டாக வைத்திருங்கள். ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 2.5 முதல் 3 லிட்டர் தண்ணீரை எடுத்துக்கொள்ளுங்கள்.
காபி, சீஸ், சாக்லெட்ஸ் போன்றவற்றுக்கு பதிலாக கோடைகாலத்துக்கு ஏற்ற பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
வெளியில் செல்லும்போது தொப்பியை அணிந்துகொள்ளுங்கள். இது உங்களை மைக்ரேனில் இருந்து சில சமயங்களில் காப்பாற்றும். அதிக வெளிச்சம் கண்ணில் படாமல் இருக்க கண்ணாடியை பயன்படுத்துங்கள்.
வெயில் அதிகமாக இருக்கும்போது ஏ.சியை கண்டிப்பாக பயன்படுத்துவோம். அப்போது டெம்பரேச்சரை 25 முதல் 27 வரை வைத்து பயன்படுத்துங்கள்.
உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க!மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!
அதிகமான வெயிலில் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தவிர்க்கவும்.
எக்காரணத்தைக் கொண்டும் தூக்கத்தையோ அல்லது உணவையோ எப்போதும் தவரவிடாதீர்கள்.
தியானம் போன்ற அமைதியான நிலையில் இருக்கும் பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்!
வெயில் கால மைக்ரேனில் இருந்து தப்பிக்க வேறென்ன வழிகளை பயன்படுத்தலாம்னு கமெண்டில் சொல்லுங்க!