உங்க மொபைல யாராவது ஹேக் பண்ணிட்டாங்களா? - கண்டுபிடிக்க எளிய வழிகள்!
டெக்னாலஜி எவ்வளவு வளர்ந்தாலும் அதுல இருக்குற ஒரு குறை என்னனா `ஹேக்கிங்தான்’. மொபைல ஹேக் பண்றதுலாம் இன்னைக்கு சாதாரணமா நடக்குது. ஒருவேளை உங்க மொபைலை யாராவது ஹேக் பண்ணிட்டாங்களானு தெரிஞ்சுக்கணுமா? இதெல்லாம் நோட் பண்ணுங்க!
உங்களோட மொபைல மல்டி யூஸர்ஸ் யூஸ் பண்ணாங்கனா... அந்த மொபைலோட பேட்டரி லைஃப் ரொம்பவே கம்மியாக ஆரம்பிக்கும். அப்படி மல்ட்டி யூஸர்ஸ் அக்கௌண்ட் கிரியேட் பண்ணியிருக்கானு செக் பண்ணிக்கோங்க.
நீங்க பயன்படுத்துற ஆப் தவிர, தேவையில்லாம சில ஆப்கள் உங்களோட மொபைல்ல இன்ஸ்டால் ஆயிருக்கும். அதன் வழியா உங்க மொபைல்ல இருக்குற முக்கியமான டேட்டாவைத் ஹேக்கர்ஸ் திருடுவாங்க.