உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளது… எளிதில் கண்டுபிடிக்கும் வழிகள்!

ரேஷன் கார்டு தொடங்கி அரசின் நலத்திட்டங்கள் வரை ஆதார் அட்டை கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்திய குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஆதார் அட்டை என்பவது அவசியமான அடையாள ஆவணமாக மாறியிருக்கிறது.

அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் ஒருவரது அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணமாக ஆதார் அட்டை பயன்படுத்தப்படுகிறது. ஆதார் தகவல்கள் வெளியான செய்திகளையும் நாம் அவ்வப்போது கடந்து வரும் நிலை இருக்கிறது.

இந்த சூழலில் ஒருவரின் ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்பு இருக்கிறது. உங்கள் ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.

ஆதார் பயன்பாட்டைக் கண்டுபிடிக்க எளிய வழி!

உங்கள் ஆதார் தகவல்கள் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://uidai.gov.in/ என்ற முகவரியில் சென்று கண்டுபிடிக்க முடியும்.

அந்த இணையதளத்தில் `Aadhaar Services’ ஆப்ஷனில்Aadhaar Authentication History’-யைத் தேர்வு செய்யவும்.

அதன்பிறகு உங்கள் ஆதார் எண், பாதுகாப்புக் குறியீடு போன்றவற்றை நீங்கள் நிரப்ப வேண்டும்.

மேலே குறிப்பிட்ட தகவல்களை அளித்த பிறகு `OTP Generatoin’ ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பருக்கு வந்த OTP-யைப் பதிவு செய்தபிறகு உங்கள் ஆதார் எங்கெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்ற தகவலை உங்களால் பார்க்க முடியும். உங்கள் ஆதார் எண்ணோடு மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்தத் தகவலை உங்களால் பார்க்க முடியும்.

ஒருவேளை உங்களுக்குத் தெரியாமல் உங்களது ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், தேசிய தனிநபர் அடையாள ஆணையத்தின் (UIDAI) அவசர எண் 1947 அல்லது help@uidai.gov.in இ-மெயில் முகவரியில் புகார் அளிக்கலாம்.

வீட்டிலிருந்தபடியே பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி… எளிதான வழிமுறைகள்!