‘ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸா ஃபீல் பண்றீங்களா?’ - இந்த விஷயங்களை செய்து பாருங்க!
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ், டிப்ரஷன் போன்ற வார்த்தைகள் எல்லாம் இன்றைக்கும் சாதாரணமாகிவிட்டது. அதில் இருந்து எப்படி வெளியே வரலாம். சில எளிதான வழிகள் இங்கே...
உங்க வாழ்க்கைல நினைச்சதும் சந்தோஷப்படுற மாதிரியான மொமண்டுகளை கிரியேட் பண்ணி வைச்சிக்கோங்க. நீங்க ரொம்பவே மனஅழுத்தமா உணரும்போது அந்த விஷயங்களை நினைச்சுப் பாருங்க. உங்களோட மனஅழுத்தம் கொஞ்சம் குறைந்துபோகும்.
தினமும் உடற்பயிற்சி செய்ங்க. உடற்பயிற்சி செய்தால் அந்த நாள் முழுவதும் உற்சாகமாக உணர்வீர்கள்.
உங்களின் உணவுப் பழக்கத்தைக் கொஞ்சம் மாற்றுங்கள். உணவில் அதிகளவு காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் மெடிட்டேஷன் பண்ணுங்க. அந்த நேரத்தில் எதைப் பற்றியும் நீங்கள் சிந்திக்க வேண்டாம்.