‘திங்கள் கிழமையை வெறுக்குற ஆளா நீங்க?!’ - இதெல்லாம் பண்ணிப்பாருங்க #MondayBlues ஓடிப்போகும்!

வீக்எண்ட எஞ்சாய் பண்ணும்போதே நம்ம மைண்ட்ல அன்கான்சியஸா ஓடுற ஒரு விஷயம், ‘ஐயோ, மண்டே ஆஃபிஸ் போணுமே’ அப்டின்றதுதான். இந்த மண்டே ப்ளூஸ்ல இருந்து எப்படி வெளிய வரலாம். சில ஐடியாக்கள் இதோ...

‘ஏன் நமக்கு திங்கள்கிழமை இதே மாதிரியே தோணுது?’ - இந்த கேள்விக்கான பதிலைக் கண்டுபிடிங்க. அந்த பிரச்னையை சீக்கிரம் சரிபண்ண முயற்சி பண்ணுங்க. எடுத்துக்காட்டாக, எப்பவும் இதே மாதிரியே நீங்க ஃபீல் பண்ணிங்கனா... உங்களுக்கு உங்க வேலைல திருப்தி இல்லைனுகூட எடுத்துக்கலாம். அப்படி உங்களுக்கு தோணிச்சுனா, வேலையை விட்டுட்டு உங்களுக்குப் பிடித்த வேற வேலையை நீங்க தேடலாம்.

திங்கள்கிழமை நிறைய வேலை இருக்குறதா நீங்க ஃபீல் பண்ணீங்கனா, அந்த வேலைகளில் கொஞ்சம் வேலையை சனிக்கிழமை இல்லைனா ஞாயிற்றுக்கிழமை முடிக்க ட்ரை பண்ணுங்க. அப்போ, திங்கள்கிழமை உங்களுக்கு கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்.

ஞாயிற்றுக்கிழமை மாலை... நீங்க அடுத்த வாரம் என்னலாம் பண்ணப் போறீங்கனு ஒரு சின்ன பிளான் போடுங்க. அதுல உங்களை எக்ஸைட் ஆக்குற சில விஷயங்களையும் சேருங்க. அதை செய்யும்போது உங்களுக்கு ஒரு நல்ல ஃபீல் வரும். இதையெல்லாம் பண்ணிட்டு வீக் எண்ட எஞ்சாய் பண்ணவும் மறந்துராதீங்க. ஃப்ரீ டைம்ல கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கும்போது இதை பண்ணுங்க. ஃபேமிலி கூடவும் நேரத்தை செலவழிங்க.

காலைல அவசர அவசரமா எழுந்துருச்சு ஆஃபீஸ்க்கு பறக்குறதை முடிஞ்ச அளவு தவிர்க்கலாம். இதனால், ஆஃபீஸ்ல திட்டு வாங்க வேண்டிய நிலைமை வரும். அந்த நாள் முழுக்க ஸ்பாயில் ஆகும். அதனால், சீக்கிரம் எந்திருச்சு ரிலாக்ஸா ஆஃபீஸ் கிளம்பி போகலாம்.

நீங்கள் அணியும் உடையில் அதிக கவனத்தை செலுத்தலாம். உங்களுக்கு கான்ஃபிடன்ஸ் தரும் உடையை நீங்கள் தேர்ந்தெடுத்து அணியலாம்.

 ‘என்னப் பிரச்னை வந்தாலும் சமாளிச்சிடலாம்’ அப்டின்ற மன தைரியத்தோட உங்களோட நாளை ஸ்டார்ட் பண்ணுங்க. பாஸிட்டிவான எண்ணங்களை வளர்த்துக்கோங்க.

உங்களை சுத்தி இருக்குறவங்களோட மனநிலையும் உங்களை பாதிக்கும். அதனால், அவங்கக்கிட்டயும் பொலைட்டா நடந்துக்கோங்க. 

மண்டே ப்ளூஸை போக்க வேற என்ன பண்ணலாம்னு நீங்க நினைக்கிறீங்கன்றதை கமெண்ட்ல சொல்லுங்க!