இளையராஜாவின் இந்த பாட்டெல்லாம் ரீ-மிக்ஸ் செய்யப்பட்டால்... நச்சுன்னு ஆறு சாங்ஸ்!

ilayaraja

`பேர் வைச்சாலும் வைக்காம’ பாடலைப் போலவே இன்றும் காரம் குறையாத இளையராஜா பாடல்கள் சிலவற்றை ரீமிக்ஸ் செய்யலாம் என்பதையும் அதற்கு எந்த நடிகர்கள் பொருத்தமாக இருப்பார்கள் என்பதையும் பார்க்கலாமா..?

`ஆடி மாசம் காத்தடிக்க’  (பாயும் புலி)

இந்தப் பாடலை சிச்சுவேஷனுக்கேற்ப ரீமிக்ஸ் செய்து விஜய் சேதுபதி போன்ற நடிகர் ஒருவர் ஆடி, நடித்தால் நிச்சயம் ஹிட்டுதான்.

`உன்னப் பாத்த நேரம்’ (அதிசய பிறவி)

இந்தப் பாடலை சந்தானமே அடுத்துவரும் தனது படங்களில் ஒன்றில் பயன்படுத்தினால் செம்ம ஹிட் அடிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

`ஆட்டமா தேரோட்டமா’ (கேப்டன் பிரபாகரன்)

பாடலுக்கேற்ற டென்சன் சிச்சுவேஷனில் நயன்தாரா போன்ற ஹீரோயின் ஒருவர் நடிப்பில் ரீமிக்ஸ் செய்தால் வைரல் நிச்சயம்.

`கடைவீதி கலகலக்கும்’ (அம்மன் கோவில் கிழக்காலே)

சிவகார்த்திகேயன் போன்ற ஒருவர் ஆடி, நடித்து ரீமிக்ஸ் செய்தால் இப்போதும் இந்தப் பாடல் செம்ம ஹிட்தான்.

 `அடியே மனம் நில்லுன்னா நிக்காதடி’ (நீங்கள் கேட்டவை)

இந்தப் பாடலை ஏதாவது ஒரு விஜய் படத்தில் ரீமிக்ஸ் செய்து அதில் விஜய் வெறியாட்டம் போட்டால் தியேட்டர் அதிர்ந்துவிடாது?

`தண்ணித்தொட்டி தேடி வந்த..’ (சிந்து பைரவி)

`மங்காத்தா’ படத்தில் இடம்பெற்ற `அம்பானி பரம்பரை’ போல ஒரு சிச்சுவேஷனில் அஜித் ஆடுவதுபோல இந்த பாடலை ரீமிக்ஸ் செய்தால் தியேட்டர்களில் நிச்சயம் திருவிழாதான்.

`பீஸ்ட்’க்குப் பிறகு நெல்சன் யாருடன் இணையலாம்..?