வித்தியாசமான ஹேர்கட்கள், டிரெண்டிங்கான Beard Style என இந்திய கிரிக்கெட்டர்கள் அவ்வப்போது அசத்துவதுண்டு. பேஷன் என்ற வகையில் இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலி தொடங்கி கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா என பலரும் டாட்டூக்களின் காதலராக இருக்கிறார்கள்.  

அப்படி டாட்டூ காதலர்களாக இருக்கும் 7 இந்திய கிரிக்கெட் வீரர்கள்!

உமேஷ் யாதவ் புத்தரை அடிப்படையாகக் கொண்டு தோள்பட்டையில் டாட்டூவும் மறைந்த தனது தாயின் போட்டோவாகத் தனது இடது கையில் டாட்டூவாகவும் வரைந்திருக்கிறார். 

கே.எல்.ராகுல் பழங்குடியின டிசைன்களைத் தனது இடது கையில் டாட்டூவாகக் குத்தியிருக்கிறார்.

ரவீந்திர ஜடேஜா வீட்டில் குதிரைகளை வளர்க்கும் ஜடேஜா, அதன் உருவத்தைத் தனது உடலில் டாட்டூவாகவும் குத்தியிருக்கிறார்.

இதெல்லாம் உங்க Whatsapp-க்கு  வரணுமா? கீழ இருக்க லிங்க்கை கிளிக் பண்ணி ஜாயின் பண்ணுங்க

Arrow

 ஹர்திக் பாண்டியா களத்தில் ஆக்ரோஷமாகச் செயல்படும் தனது குணத்தை இடது கையில் புலி உருவத்தில் டாட்டூவாகப் போட்டிருக்கிறார்.

சூர்யகுமார் யாதவ் உடலின் பல இடங்களில் தனது குணநலன்கள் பற்றி டாட்டூவாகக் குத்தியிருக்கிறார்.

ஷிகர் தவான் ஷிகர் தவான், கே.எல்.ராகுலைப் போலவே இடது கை, முதுகு ஆகிய இடங்களில் Tribal Design-லும், இலையில்லா மரமொன்றில் அமர்ந்திருக்கும் பறவை டாட்டூ உள்ளிட்ட 4-க்கும் மேற்பட்ட டாட்டூக்களைக் குத்தியிருக்கிறார்.  

விராட் கோலி இடது கையில் நல்லிணக்கத்தையும் சக்தியையும் குறிக்கும் டாட்டூ, பெற்றோர்களான  சரோஜ் - பிரேம் கோலியின் பெயர்கள், சிவன், ஜப்பானிய சாமுராய் உருவங்களை டாட்டூவாகக் குத்தியிருக்கிறார்.