ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புள்ள இந்திய வீரர்கள்!

ஆண்கள் ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளது. இதற்காக ஜெர்மனி அணியுடன் மோத உள்ளது.

பெண்கள் ஹாக்கி அணி காலிறுதிப் போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு தகுதிப்பெற்றுள்ளது. அரையிறுதியில் அர்ஜெண்டினாவுடன் மோதுகிறது.

ஈட்டி எறிதல் போட்டியில் தனது முதல் வாய்ப்பிலேயே நீரஜ் சோப்ரா 86.65 மீ தூரம் எறிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

மல்யுத்தப் போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவில் ரவிக்குமார் தாஹியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்னும் ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் ரவிக்குமாருக்கு பதக்கம் உறுதி செய்யப்படும்.

மல்யுத்தத்தின் 87 கிலோ எடை பிரிவில் தீபக் பூனியா அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இன்னும் ஒரு போட்டியில் அவர் வெற்றிப் பெற்றால் பதக்கம் வெல்வது உறுதியாகும்.

பெண்களுக்கான மல்யுத்தப் போட்டியின் 57 கிலோ எடைப்பிரிவில் அன்ஷூ மாலிக் தோல்வியைத் தழுவினார். எனினும், அவர் வெண்கலப்பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது.

ஃப்ரீ ஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவில் பஜ்ரங் பூனியா பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்கள் ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப்பிரிவில் வினேஷ் போகத் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது.