நடிகர் இளவரசுவின் 'Inspiring'  சினிமா பயணம்!

1980-களில் இயக்குநர் கனவுடன் மதுரையிலிருந்து புறப்பட்டவர்களில் இளவரசுவும் ஒருவர். ஆரம்பத்தில் ஸ்டில்ஸ் ரவியின் அசிஸ்டெண்ட்டாகத் தன்னோட கரியரைத் தொடங்கினார்.

கடைசியாக பாரதிராஜாவோட பட்டறைக்கு முகவரி கிடைக்க, அவர்கிட்ட கேமராமேனா இருந்த பி.கண்ணன்கிட்ட உதவியாளரா வந்து சேர்கிறார், இளவரசு. அதுக்குப் பின்னால மண்வாசனை படத்துலதான் முதல்முதலா இவரோட பேர் ஸ்கிரீன்ல வருது. அதைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டிருக்கார்.

கடலோரக் கவிதைகள்’ சின்னப்பதாஸோட சேக்காளிகள்ல இவரும ஒருத்தர்.'முதல் மரியாதை’ படத்துல சிவாஜி சாரை மாட்டிவிடுற அந்த போட்டோகிராஃபர்னு ஆட்கள் வராத கேரெக்டர்களைப் பண்ணினார், இளவரசு

1987-ம் வருஷம் வெளியான ‘வேதம் புதிது’ படத்துல பாலு தேவரைச சொத்துக்கு ஆசைப்பட்டுக் கொல்லுற கேரெக்டர் ஒண்ணு இருந்தது. ஆனா, அன்னைக்குனு பார்த்து நடிக்கிற ஆள் வரலை. பாரதிராஜா சுற்றிலும் பார்க்க, அங்கே கேமராவைப் பார்த்துக் கொண்டிருந்த இளவரசு நின்றிருக்கிறார். தம்பி நீயே பண்ணிடுப்பா எனக் கூப்பிட்டு அந்த கேரெக்டரை நடிக்க வைத்திருக்கிறார்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

பாஞ்சாலங்குறிச்சி, நினைத்தேன் வந்தாய், இனியவளே, மனம் விரும்புதே உன்னை, ஏழையின் சிரிப்பில்னு பல படங்களுக்கு கேமராமேனா வேலை பார்த்தார். 1999-ம் வருஷம் பல பெரிய படங்கள் ரிலீஸ் ஆச்சு. அதுல மனம் விரும்புதே உன்னை படமும் ரிலீஸ் ஆச்சு. அதுக்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தமிழ்நாடு அரசின் விருதைப் பெற்றார்.

ஒளிப்பதிவு செஞ்ச காலங்கள்லயே பசும்பொன், பொற்காலம், வெற்றிக் கொடிகட்டு, பூவெல்லாம் உன்வாசம், பாண்டவர்பூமினு வரிசையா படங்கள் நடிச்சுக்கிட்டிருந்தார். ஆனா, 2001-ம் வருஷம் நடிச்ச தவசிக்குப் பின்னால முழுநேர நடிகரா மாறினார், இளவரசு. படங்கள் வரிசை கட்ட ஆரம்பிச்சது. ஆனா, இடையிடையே காமெடி, குணச்சித்திர கேரெக்டர்கள் கிடைச்சது.

2006-ம் வருஷம் 23-ம் புலிகேசி வாய்ப்புக் கிடைச்சது. மனுஷன் காமெடியில பிச்சு உதறியிருப்பார். தொடர்ந்து காமெடியான கதாபாத்திரத்துல திருவிளையாடல் ஆரம்பம், சென்னை 600028, இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்னு நடிச்சுத் தீர்த்தார். அடுத்ததாக குணச்சித்திரத்துக்கு ஒரு லேண்ட்மார்க் வேணுமே.. இது எனக்கு வராதுனு யார்ரா சொன்னானு, களவாணி படத்துல இறங்கி அடிச்சிருப்பார் மனுஷன்.

இளவரசுவின் பலமே நையாண்டி கலந்த பாடிலாங்குவேஜூம், அதோட சேர்ந்த ஸ்லாங்கும்தான். இளவரசுவோட சொந்த ஊர் மதுரைப் பக்கம் மேலூர். அப்பாதான் இளவரசுவுக்கு ரோல்மாடல். இவர் ஊரைவிட்டு வந்துட்டாலும், இவரோட ஸ்லாங்கும், ரோல்மாடலும் இன்னும் மாறவே இல்லை. புத்தக வாசிப்பு தன்னை நிலைப்படுத்திக்கும்னு நினைக்கிறவர். அதிகமான புத்தக வாசிப்பு இவரோட பாடிலாங்குவேஜ்க்கு பலமா இருக்குறதாக இளவரசு நம்புறார்.

இளவரசுவோட அப்பா பேரு மலைச்சாமி,  1967- லிருந்து 71 வரைக்கும் தி.மு.க மேலூர் வடக்குத் தொகுதி எம்.எல்.ஏ-வா இருந்திருக்கார். சோகம் என்னன்னா.. முன்னாள் எம்.எல்.ஏ மகன் இளவரசுனு என்னைக்குமே அவர் வெளியில சொன்னதே இல்லை.