எந்திரன் பற்றி  5 ஆச்சர்ய தகவல்கள்!

இயக்குநர் ஷங்கரின் ட்ரீம் புராஜக்டான எந்திரனுக்கான ஸ்கிரிட்ப் 2001-லேயே தயாரானது. கமல்ஹாசன் - ப்ரீத்தி ஜிந்தா நடிப்பதாக அறிவிக்கப்பட்டு, ரோபோ என்கிற பெயரில் போட்டோஷூட்டும் நடந்தது. ஆனால், சில காரணங்களாகக் கைவிடப்பட்டது.

2008 ஜனவரியில் ரஜினி நடிக்க ஒப்புக்கொண்ட பிறகு, ரஜினிக்கு ஏற்றவாறு ஸ்கிரிப்டை மாற்றி எழுதியிருக்கிறார் ஷங்கர். புரஃபஸர் போரா ரோலில் நடிக்க அமிதாப் பச்சன், ஜே.டி.சக்கரவர்த்தி, சத்யராஜ் மற்றும் பிரிட்டீஷ் நடிகர் பென் கிங்ஸ்லி ஆகியோரை படக்குழுவினர் பரிசீலித்திருக்கிறார்கள்இறுதியாக டேனி டென்சோங்பா உள்ளே வந்தார்.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

2001 காலகட்டத்தில் நாயகியாக ஷங்கரின் முதல் தேர்வு ஐஸ்வர்யா ராய்தான். ஆனால், பிஸியாக இருந்ததால் அப்போது பிரீத்தி ஜிந்தா ஒப்பந்தமானார். 2008-ல் ஷூட்டிங் தொடங்கியபோது ஐஸ்வர்யா ராயே ஹீரோயின் சனா கேரக்டரில் நடித்தார்.

Men in Black சீரிஸ் படங்களின் காஸ்ட்யூம் டிசைனர் Mary E. Vogt மற்றும் The Matrix, Kill Bill சீக்வெல் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டரான Woo-Ping Yuen ஆகியோர் பணியாற்றிய முதல் இந்தியப் படம் இதுதான்.

ஆப்பிளின் iTunes-ல் World Album Top 10-ல் இடம்பிடித்த முதல் தமிழ் படம். ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதீஜா முதன்முறையாக இந்தப் படத்தில்தான் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார்.