துண்டு கல்வெட்டுகள்; திருவாச்சி விளக்கு - மதுரை மீனாட்சி கோயிலின் சிறப்புகள்!
கற்சிலைகளைத் தவிர்த்து ஆயிரங்கால் மண்டபத்தில், இறைவன் - இறைவியின் செப்புத் திருமேனிகளும், கண்ணாடிப் பேழைகளும் இடம் பெற்றுள்ளது.
மீனாட்சி அம்மனை திருமணம் செய்வதற்காக, சிவன் திருமணக் கோலத்தில் வந்ததால், சுந்தரேஸ்வரர் என்றும் சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார்.
இது வரை பல கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், சமீபத்தில் புதிதாக 410 வாசிக்கப்படாத கல்வெட்டுகள் மீனாட்சியம்மன் கோயிலில் கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு வருடத்தில் 274 நாள்களும் திருவிழாக் கொண்டாட்டங்கள் நிகழும் ஒரே தலம்.
வைகை ஆற்றின் தென் பகுதியில் அமைந்துள்ள மீனாட்சி அம்மன் கோயில் மொத்தம் 10 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டது.