நம்பர் `369’ ராசி… எழுத்தாளர் முகம்..  மம்மூட்டி குறித்த 7 சுவாரஸ்ய தகவல்கள்!

நடிகர் மம்மூட்டியின் மனதுக்கு நெருக்கமான எண் – 369. அவருடைய எல்லா கார்களின் பதிவு எண்களிலும் தவறாமல் 369 இடம்பெற்றிருக்கும்.

`சத்யன் போன்ற பெரிய மாஸ்டர் நடித்த படத்தின் மூலம் எனது திரைப் பயணம் தொடங்கியது நான் செய்த அதிர்ஷ்டம்’ என்று ஒருமுறை மனம் திறந்திருந்தார் மம்மூட்டி.

எர்ணாகுளம் சட்டக்கல்லூரியில் எல்.எல்.பி முடித்த மம்மூட்டி, மஞ்சேரி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் இரண்டு ஆண்டுகள் பணியாற்றி உள்ளார்.

இந்தி, தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் என ஆறு மொழிகளில் நடித்திருக்கிறார்.

சுமார் 15 படங்களில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார்.

படையோட்டம் தொடங்கி டிவெண்டி 20 வரை மம்மூட்டி மற்றும் மோகன்லால் இணைந்து 51 படங்களில் நடித்திருக்கிறார்கள். 

பிரபல மலையாள நாளிதழில் வாரம்தோறும் வெள்ளிக்கிழமைகளில் எழுதி வந்த மம்மூட்டி, அதைத் தொகுத்து, `காழ்ச்சப்பாடுகள்’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டார்.