`கார் பார்க்கிங் மட்டும் 6 மாடிகள்’ - அம்பானியின் `Antilia’ வீட்டில் என்ன ஸ்பெஷல்?

மும்பையின் கும்பல்லா ஹில் பகுதியில் அல்டாமவுண்ட் சாலையில் முகேஷ் அம்பானியின் `Antilia’ இல்லம் அமைந்துள்ளது.

உலகளவில் புகழ்பெற்ற அம்பானியின் வீடு 4,00,000 சதுர அடி பரந்து விரிந்தது. உலக அளவில் ரியல் எஸ்டேட் மதிப்பு உச்சத்தில் இருக்கும் அந்தப் பகுதியில் ஒரு சதுர அடியின் விலை ரூ.80,000.

அமெரிக்க நிறுவனமான Perkins and Will & Hirsch Bedner ஆலோசனையின் கீழ் கட்டப்பட்டது.

`Antilia’ என்பது அட்லாண்டிக் கடலில் இருப்பதாக நம்பப்படும் புராண காலத் தீவின் பெயர்.

மும்பையில் இருக்கும் இந்த ஈர்ப்புமிக்கக் கட்டடம் 27 மாடிகளைக் கொண்டது. இந்தக் கட்டடத்தின் உயரம் சுமார் 570 அடி.

அம்பானி வீட்டில் 50 பேர் ஒரே நேரத்தில் உட்கார்ந்து பார்க்கும் அளவுக்கு தியேட்டர் ஒன்று உள்ளது.

வீட்டில் மொத்தமாக 9 லிஃப்டுகள் உள்ளன. குடும்பத்தினர், பணியாளர்கள், கெஸ்டுகளுக்கென தனித்தனி லிஃப்டுகள் இருக்கின்றன.  

`Antilia’ இல்லத்தில் பணியாற்றும் மொத்த நபர்களின் எண்ணிக்கை 600.

சூரியன், தாமரை வடிவங்களை அடிப்படையாகக் கொண்டு வீட்டின் உள்புறம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் மொத்தம் மூன்று ஹெலிபேட்கள் உள்ளன.

யோகா, நடனங்களுக்கென தனித்தனியாக ஸ்டுடியோக்கள் உள்ளன. நீடா அம்பானி பரதநாட்டியக் கலைஞராவார்.

மொத்தமாக மூன்று நீச்சல் குளங்கள், சலூன், பெரிய அரங்கு, ஸ்பாவும் இருக்கிறது.

வீட்டில் ஆறு தளங்கள் கார் பார்க்கிங்குக்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. மொத்தம் 168 கார்கள் அம்பானியிடம் உள்ளன. ஏழாவது தளத்தில் சர்வீஸ் ஸ்டேஷனும் வைத்துள்ளார்.

அம்பானி சொந்தமாக ஐஸ்கிரீம் பார்லர் ஒன்றையும் வீட்டில் வைத்துள்ளார். ஸ்னோ ரூம் ஒன்றும் வீட்டில் உள்ளது.

வீட்டின் மேல் தளத்தில் அம்பானியின் குடும்பம் வசிக்கிறது. சூரிய ஒளியை அவர்கள் அதிகம் விரும்புவதால் மேல் தளத்தில் வசிக்கிறார்களாம்.

`88 ஆண்டுகளுக்குப் பின் டாடா வசமாகும் ஏர் இந்தியா’ – ஒரு சாம்ராஜ்யத்தின் கதை!

Read More