சந்தோஷ் நாராயணன் பத்தி இதெல்லாம் தெரியுமா?

கல்லூரி படிக்கும்போதே சந்தோஷ் நாராயணனுக்கு மியூசிக் மேல ஆர்வம் வந்திடுச்சு. ஆனால், காலேஜ் முடிச்சதும் ஒரு நாள் மட்டும் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பார்த்துருக்காரு. அன்னைக்கு லஞ்ச் டைம்ல, உங்க காலேஜ் லைஃப் இன்னும் முடியலன்ற ரேஞ்சுக்கு கம்பெனில பேசியிருக்காங்க.

வெளியே வந்ததும் அம்மாவுக்கு கால் பண்ணியிருக்காரு. அம்மா கேட்ட முதல் கேள்வி. ‘என்னடா வேலைய விட்டுட்டியா?’ அப்டின்றதுதான். நமக்கெல்லாம் மியூசிக்தான் சோறு போடும்னும் சொல்லியிருக்காங்க. அதை இன்ஸ்பைரிங்கா எடுத்துட்டு உழைக்க ஆரம்பிச்சிருக்காரு.

ஒரு கட்டத்துல வறுமை அதிகமாயிருக்கு. படம் எதுவும் நடக்காதுனு நினைச்சிருக்காரு. அப்போ ரிச்சி ஸ்ட்ரீட்ல கம்ப்யூட்டர் அஸம்பிள் பண்ணி கொடுக்க ஆரம்பிச்சிருக்காரு. ஆரம்பத்துல எலக்ட்ரானிக் மியூசிக் பண்ணிட்டு இருந்துருக்காரு. அப்போலாம் இவரோட பெயர் டி.ஜே.சாண்டி.

பா.இரஞ்சித் அறிமுகமாகி ‘அட்டக்கத்தி’ படத்துக்கு மியூசிக் போட சொல்லியிருக்காரு. அப்போ, புரொடியூஸர் சி.வி.குமார்... சந்தோஷ்கிட்ட, `எனக்கு நீங்க இந்த படத்துல மியூசிக் பண்றதுல விருப்பம் இல்லை. ஆனால், இரஞ்சித் நீங்கதான் வேணும்னு சொல்றாரு. நீங்க நல்லா பண்ணீங்கனா... எனக்கும் வேணும்”னு சொல்லியிருக்காரு.

பல இசையமைப்பாளர்கள் ரஹ்மானைப்  பார்த்து நைட்லதான் மியூசிக் கம்போஸ் பண்ணுவாங்க. ஆனால், இவருக்கு அப்படி எந்த சென்டிமென்டும் இல்லை. ஏரியால கரன்ட் இருக்கும்போது மியூசிக் பண்ணிப்பாராம்.

உங்க Favourite Celebrities பத்தின  1000+ Super Cool தகவல்கள் படிக்க 7WOWFacts Android app Install பண்ணுங்க!

இவர் பண்ற மியூசிக்லாம் கேட்டுட்டு, ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டுதான மியூசிக் போடுறனு கேப்பாங்களாம். இவரோட ஃப்ரெண்ட்ஸ் ட்ரக்ஸ் யூஸ் பண்ணிட்டு மியூசிக் பண்ணதைக் கேட்ருக்காரு. கேவலமா இருந்துச்சாம். சந்தோஷ் நாராயணன் ஒரு டீடோட்லர்.

 கானா பாடல்களை அவருக்கு அறிமுகப்படுத்தினதே பா.இரஞ்சித்தானாம். அதுக்கு முன்னாடிலாம் கானா என்றால் என்னவென்றே அவருக்குத் தெரியாது. கானா பாடல்கள் பத்தி நிறைய விஷயங்களை ’கானா’ பாலா, சந்தோஷூக்கு சொல்லிக் கொடுத்தாராம்.

நடிகர் விஜய்க்கு ஜிகர்தண்டா படத்தின் பாடல்கள் ரொம்பவே பிடிக்குமாம். இதை சந்தோஷ்கிட்ட சொன்னதோடு, அவரின் பிறந்தநாளுக்கு ஒரு கிரிக்கெட் பேட்டும் பரிசளித்திருக்கி-றார்.

கிரிக்கெட்னா சந்தோஷ்க்கு உயிர். ஜி.என்.சி.சிதான் அவர் கிரிக்கெட் வாட்ஸ் அப் குரூப்போட பெயர். அதுல விளையாட வராம, பேசாம இருந்தாலோ, ஃபார்வேட் மெசேஜ் அனுப்புனாலோ ரிமூவ் பண்ணிடுவாங்க-ளாம்.

சந்தோஷ் முதல் படமாக பண்ண வேண்டியது  தமிழ் படம். அந்தப் படத்துக்காக சாம்பிளுக்கு போட்ட பாட்டுலாம் மொக்கையா இருந்ததால, ’கிளம்பு’னு சொல்லியிருக்-காங்க.