`1,212 தூண்கள்;  22 புனிதத் தீர்த்தங்கள்’ ராமேஸ்வரம் கோயில்  சுவாரஸ்யங்கள்!

பழமைவாய்ந்த இந்தக் கோயிலின் மூலவர் சிவபெருமான். ஸ்ரீராமர் இவரை வழிபட்டு பலன் பெற்றதால் ’ராமநாதர்’ என அழைக்கப்படுகிறார்.

அம்பாள் தாயார்  பர்வதவர்தனிக்கு அமைக்கப்பட்டுள்ள பீடத்துக்குக் கீழேதான் ஆதிசங்கரர் நிறுவிய ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டுள்ளது.

அம்பாளின் பக்தரான ராயர் என்பவர் செய்த உப்பு லிங்கம், இன்றும் கோயிலின் மூலவரான ராமநாதருக்கு பின்பு வைத்து வணங்கப்படுகிறது.

இந்தக் கோயில் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றாகவும், 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும்  போற்றப்படுகிறது.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

கோயிலின் அடையாளமாக மூன்றாம் பிரகாரம் பார்க்கப்படுகிறது. இந்தப் பிரகாரத்தில் 1,212 தூண்களால், 690 அடி நீளம், 435 அடி அகலம் என, பார்க்கவே பிரமாண்டமாக கட்டமைக்கப்பட்டிரு-க்கும்.

காசி - ராமேஸ்வரம் புண்ணிய யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் நீராடி, கடற்கரை மணலை எடுத்துக்கொண்டு காசியின் கங்கை நதியில் சேர்க்க வேண்டும் என்பது ஐதீகம்.

ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம், கோயிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடி ராமநாத சுவாமியை வணங்கினால் மோட்சம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ராமநாத சுவாமி சன்னதி, கருப்பு கிரானைட் கற்களால் வடிவமைக்கப்பட்டு-ள்ளது. மேற்கூரை கோபுரத்தில் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது.

பாண்டியர்கள் காலத்திலும், பிற மன்னர்கள் ஆட்சி காலத்திலும், ராமநாதபுரத்தை ஆட்சி புரிந்த சேதுபதி மன்னர்கள் ஆட்சியின் போதும் கோயில் சீரமைக்கப்பட்டது.

வெளியே இருக்கக் கூடிய 22 தீர்த்தங்கள், கோயிலுக்குக்கு எதிரே அமைந்துள்ள அக்னி தீர்த்தம் எனும் கடலில் அமைந்துள்ளதாக நம்பப்படுகிறது.