ஆணவமிக்கவராகக் கருதப்பட்ட சில்க் ஸ்மிதா சிவாஜியுடன் ஒரு படத்தில் நடித்தார். ஷூட்டிங்கில் சிவாஜி செட்டுக்கு வந்தபோது சில்க் ஸ்மிதாவைத் தவிர அனைவரும் எழுந்து நின்றிருக்கிறார்கள். சிவாஜிக்கு உரிய மரியாதை தரவில்லை என்றும், `என்ன ஒரு ஆணவம்’ எனவும் கடுமையான விமர்சனங்களை அவர் சந்தித்தார். ஆனால், சில்க் ஸ்மிதாவோ, ``நான் எழுந்து நின்றால், எனது ஆடையைப் பார்த்து சிவாஜி சார் சங்கடப்பட நேரிட்டிருக்கலாம்” என்று விளக்கம் கொடுத்தாராம்.