`10 ஆண்டு நிராகரிப்பு… மாஸ்க்கின் பின்னணி’ – `Squid Game’ பற்றிய 11 சுவாரஸ்யங்கள்!

Squid Game கதைக்கான ஐடியா-வை இயக்குநர் hwang dong-hyuk 2008-ம் ஆண்டே பிடித்துவிட்டார். இந்தக் கதை ஏறக்குறைய 10 ஆண்டுகள் பல்வேறு தயாரிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில், 2019-ம் ஆண்டு இதை வெப் சீரியஸாகத் தயாரிக்க நெட்ஃபிளிக்ஸ் முன்வந்திருக்கிறது. இந்த வெப் சீரிஸ் தவிர 5 படங்கள் இயக்கி பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

– வெப் சீரிஸின் மேஜர் அட்ராக்‌ஷன்களில் ஒன்று அதில் வரும் பிரத்யேக மாஸ்க். கிட்டத்தட்ட புதிய அடையாளமாகவே மாறியிருக்கும் அந்த மாஸ்கை கலை இயக்குநர் Chae Kyung-sun, வாள் சண்டையில் பயன்படுத்தப்படும் மாஸ்குகள் மற்றும் கொரிய தீபகற்பத்தில் பயன்படுத்தப்படும் Haehotal பாரம்பரிய மாஸ்குகளின் வடிவங்களில் இன்ஸ்ஃபையர் ஆகி உருவாக்கியிருக்கிறார்.

– முதல் எபிசோடான `Red Light, Green Light’-ல் வரும் மிகப்பெரிய பொம்மை, 1970,80-களில் வெளியான சிறுவர் பாடப் புத்தகங்களில் வரையப்பட்டிருந்த சித்திரங்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.

கதையின் முக்கிய கேரக்டர்களான Gi-hun மற்றும் Sang-woo பாத்திரங்களில் நடிக்க Lee Jung-jae மற்றும் Park Hae-soo ஆகியோரைத் தொடக்கம் முதலே மனதில் வைத்திருக்கிறார் இயக்குநர். 

– மூன்றாவது எபிசோடில் வரும் டல்கோனா சேலஞ்சைப் படமாக்குவதற்காக டல்கோனா செய்வதில் வல்லுநர் ஒருவரை வரவழைத்து 3 நாட்கள் ஷூட் செய்திருக்கிறார்கள். அந்த மூன்று நாட்களும் செட் முழுவதும் சர்க்கரை நெடி சூழ்ந்திருந்ததாம்.

– கயிறு இழுக்கும் போட்டியின்போது, நடிகர்களிடமிருந்து போட்டியாளர்களின் ரியாக்‌ஷன்கள் ஒரிஜினலாக வர வேண்டும் என்பதற்காக எதிர்முனையில் இயந்திரம் ஒன்றைப் பயன்படுத்தினார்களாம். இதனால், கயிறை இழுக்கவே முடியாது என்பது போன்ற சூழலில் நடிகர்கள் கடும் சிரமத்துக்கிடையில் நடித்திருக்கிறார்கள்.

– இறந்தவர்களை எடுத்துச் செல்ல வெப் சீரிஸில் பயன்படுத்தப்பட்ட பெட்டி, பரிசுப் பெட்டியைப் போன்று வடிவமைக்கப்பட்டிருந்தது. காரணம், போட்டியை நடத்துபவர், தன்னைக் கடவுளாக உருவகித்துக் கொண்டு போட்டியாளர்களுக்கு இறப்பு வடிவத்திலும் பரிசைக் கொடுக்க முடியும் என்பதை உணர்த்துவதற்காக அப்படி வடிவமைக்கப்பட்டதாம்.

– இறந்தவர்களை எரிக்கும் அந்த அறை, நாஜிக்கள் ஆட்சியில் இருந்த Auschwitz வதை முகாமின் அடிப்படையில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

– Glass Stepping Stones போட்டிக்காக அமைக்கப்பட்ட செட் தரையில் இருந்து ஒரு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டதாம். நடிகர்களுக்கு உண்மையிலேயே பயத்தை ஏற்படுத்தும் வகையில் இதைச் செய்திருக்கிறார்கள்.

– படமாக எழுதியை வெப் சீரியஸாக மாற்றும்போது, புதிய விளையாட்டுகளைச் சேர்த்ததோடு, போலீஸ் கேரக்டரான Jun-Ho பாத்திரமும் பின்னர் சேர்க்கப்பட்டிருக்கிறது.

– Sqiud Game சீரிஸின் இரண்டாவது பாகம் வந்தால் போட்டியை நடத்துவதாகக் காட்டப்பட்டிருக்கும் `Front Man’ பின்னணியைப் பற்றியதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் இயக்குநர் Hwang.

`எலிமினேட் ஆனா Death தான்!’ – நெட்ஃபிளிக்ஸின் `Squid Game’ எப்படியிருக்கிறது?