`217 அடி கோபுரம்; 14 கி.மீ கிரிவலப் பாதை’  திருவண்ணாமலை கோயில் பத்தி இதெல்லாம் தெரியுமா ?

கைலாயத்தில் சிவன் இருப்பதால் கைலாய மலை சிறப்பு. ஆனால் லிங்கமே மலையாக இருப்பதால் திருவண்ணாமலை மிகவும் சிறப்பு வாய்ந்தது.

இறைவன் சிவபெருமான் ’அண்ணாமலையார், அருணாச்சலேஸ்வரர்’, அம்பாள் ’உண்ணாமுலையாள், அபிதகுஜாம்பாள்’ என்றும் அழைக்கப்படுகின்றனர். பஞ்ச பூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி எனப்படும் நெருப்பு தன்மை கொண்ட தலமாகும்.

நாயன்மார்களின் பாடல் தலம் இது. இந்த திருவண்ணாமலை கோயிலுக்குப் பின்பு இருக்கும் மலை சிவனின் அம்சமாக கருதி வழிபடுகின்றனர்

’அருணம்’ என்றால் ’சிவப்பு நிறத்தில் இருக்கும் நெருப்பு’. ’சலம்’ என்றால் “மலை”. சிவபெருமான் சிவப்பு நிறத்தில் எரியும் நெருப்பின் தன்மை கொண்ட மலையாக இருப்பதால் இந்த மலைக்கு “அருணாச்சலம்” என்று பெயர் ஏற்பட்டது

ஞானிகளை ஈர்க்கும் தலமாக திருவண்ணாமலை கோயில் விளங்குகிறது. இந்த மலையின் அடிவாரத்தில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து தனது சித்துக்கள் மூலம் மக்களுக்கு பல நன்மைகளை செய்த ’சேஷாத்திரி சுவாமிகள்’ சமாதி மற்றும் ஆசிரமம் உள்ளது.

உங்க ரெகுலர் வேலைகளை பார்க்குறப்போவே  ஜாலியான தகவல்களையும் தெரிஞ்சுக்கணுமா? தமிழ்நாடு நவ் பாட்காஸ்ட் கேளுங்க! மிஸ் பண்ணவே கூடாத ரகளையான மூணு சீரீஸ் வருது!

`பல லட்சக்கணக்கான பக்தர்கள் 14.7 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட மலையை கிரிவலம் வந்து, சிவபெருமானையும் அம்பாளையும் தரிசித்து அவர்களின் அருளையும் சித்தர்களின் ஆசிகளையும் பெறுகின்றனர்.

800 ஆண்டுகளுக்கு முன்னரே அதாவது கி.பி 1240-ல் இங்கு கிரிவலம் செல்ல ஜடாவர்ம விக்ரம பாண்டியன் பாதை அமைத்து பணி செய்தார்.

’கார்த்திகை தீபம்’ திருவிழா இக்கோயிலில் 10 நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிற-து. விழாவில் இறுதி நாளன்று மாலை 6 மணிக்கு மேல் ஆலயத்தின் இறைவன் மற்றும் இறைவிக்கும் பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, கோயிலில் இருந்தவாறே மலை உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது.

கிரிவலப் பாதையின் தூரம் 14.7 கிலோ மீட்டர். இந்த பாதையில் 20 ஆசிரமங்களும், 360 தீர்த்தங்களும், பல சந்நிதிகளும், அஷ்ட லிங்கங்களும் உள்ளன. 26 சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.

கிரிவலப்பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யமலிங்கம், நிருதி லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம் மற்றும் ஈசான்ய லிங்கம் என எட்டு லிங்கங்கள் உள்ளன.