பிரிட்டனின் புதிய பிரதமர் ரிஷி சுனக் - 10 சுவாரஸ்யங்கள்!
பிரிட்டன் வரலாற்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அந்நாட்டின் பிரதமராவது இதுவே முதல் முறை. பிரதமராக இருந்த லிஸ் ட்ரஸ் கடந்த அக்டோபர் 10-ல் ராஜினாமா செய்தார். இதையடுத்து ரிஷி சுனக் பிரதமராகியிருக்கிறார்.
பிரிட்டனில் சவுதாம்ப்டனில் 1980 மே 12-ல் பிறந்தவர். ரிஷியின் பெற்றோர்கள் இந்திய - ஆப்பிரிக்க பின்புலம் கொண்டவர்கள்.
ரிஷியின் தந்தை யாஷ்வீர் சுனக் பிரிட்டன் தேசிய சுகாதார மையத்தில் பணிபுரிந்தவர். தாய் உஷா சுனக், மருந்தகம் ஒன்றை நடத்தி வந்தவர்.
புகழ்பெற்ற வின்செஸ்டர் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் அரசியல், பொருளாதாரம், தத்துவம் மேலாண்மையியல் படித்தவர் ரிஷி.
இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தியைக் காதல் திருமணம் செய்துகொண்டவர் ரிஷி சுனக். இந்தத் தம்பதியினருக்கு கிருஷ்ணா, அனோஸ்கா எனும் 2 மகள்கள் உள்ளனர்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் வேட்பாளராக ரிச்மாண்ட் தொகுதியில் 2015 தேர்தலில் வெற்றி பெற்றார். இதே தொகுதியில் 2017, 2019 தேர்தல்களிலும் வென்று எம்பியாகத் தேர்வானார்.
பிரிட்டன் உள்ளாட்சி அரசியல்துறை அமைச்சராக 2018-ல் பதவியேற்ற இவர், பிரிட்டன் கருவூலத்தின் தலைமைச் செயலாளராகவும் 2019-ல் பதவி வகித்தார்.
ரிஷி சுனக்கின் ஆண்டு வருமானம் 700 மில்லியன் பவுண்டுகளுக்கு மேல் இருக்கும். `எ போட்ரேட் ஆஃப் மார்டர்ன் பிரிட்டன்' மற்றும் பொருளாதாரம் வணிகம் குறித்த புத்தகங்களையும் எழுதியிருக்கிறார்.
தன்னுடைய ஓய்வு நேரத்தில் உடற்பயிற்சி செய்வது, கிரிக்கெட், கால்பந்து விளையாடுவது, சினிமா பார்ப்பது போன்றவற்றை செய்கிறார் ரிஷி சுனக்.
அமெரிக்கா, பிரிட்டன் என இரு நாடுகளில் குடியுரிமை பெற்றவர் ரிஷி. நகைச்சுவையான பேச்சால் ஊடகங்களிலும் பிரபலமானவர்.