* 1991-ம் ஆண்டு இந்தியாவுக்கு திரும்பி வந்த நிர்மலா சீதாராமன், பா.ஜ.க-வில் 2006-ம் ஆண்டு இணைந்தார். 2010-ம் ஆண்டு கட்சியின் பேச்சாளர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். 2014-ம் ஆண்டு பா.ஜ.க ஆட்சியைப் பிடித்தபோது வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகம் இவருக்கு கொடுக்கப்பட்டது. பின்னர், பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார்.